செய்திகள்

உள்ளுராட்சி சபைகளை ஆணையாளரின் கீழ் கொண்டுவரக் கூடாது உடனடியாக தேர்தல் வேண்டும் : உறுப்பினர்கள் தீர்மானம்

எதிர்வரும் 15ம் திகதியுடன் ஆயுட்காலம் முடிவடையவுள்ள உள்ளுராட்சி சபைகளின் செயற்பாடுகளை விசேட ஆணையாளர்களின்கீழ் கொண்டுவரும் தீர்மானத்தை நிறுத்தி தேர்தலை நடத்தமாறு கோரி உள்ளுராட்சி சபை உறுப்பினர்களின் ஒன்றியத்தினால் நேற்று கொழும்பில் கூட்டமொன்று நடத்தப்பட்டுள்ளது.
நாரஹேன்பிட்டி சாலிக்கா மண்டபத்தில் இந்த கூட்டம் நடைபெற்றுள்ளதுடன் இதன்போது உள்ளுராட்சி சபைகள் தொடர்பாக 7 தீர்மானங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் இதனை ஜனாதிபதியிடம் கையளிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
இந்த கூட்டத்தில் உள்ளுராட்சி சபைகளின் தலைவர்கள் மற்றும் உறுப்பினர்கள்  உட்பட 1000ற்கும் மேற்பட்டோர் கலந்துக்கொண்டுள்ளனர்.