செய்திகள்

உள்ளுராட்சி சபைகள் விசேட ஆணையாளரின் கீழ் வருகின்றது பொதுத் தேர்தலின் பின்னே இவற்றுக்கான தேர்தல் : ஜனாதிபதி

எதிர்வரும் 15ம் திகதிக்கு பின்னர் ஆயுட்காலம் முடிவடையவுள்ள சகல உள்ளுராட்சி சபைகளின் செயற்பாடுகளும் விசேட ஆணையாளர்களின் கீழ் கொண்டுவரப்படவுள்ளதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.
இதேவேளை அந்த உள்ளுராட்சி சபைகளின் தேர்தல் பாராளுமன்ற தேர்தலுக்கு பின்னரே நடத்தப்படுமெனவும் ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.
அதுவரை பதவிக்காலம் நிறைவடையும் உள்ளூராட்சி மன்றங்களின் செயலாளர்களை அவற்றுக்கான விசேட ஆணையாளர்களாக நியமிக்க நடவடிக்கை எடுப்பதாக ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.
நேற்று மாலை பேருவளை பகுதியில் நடைபெற்ற நிகழ்வொன்றில் உரையாற்றுகையிலேயே அவர் இதனை தெரிவித்துள்ளார்.
கடந்த மார்ச் மாதம் உள்ளுராட்சி சபைகளின் ஆயுட்காலம் முடிவடையவிருந்த நிலையில் அந்த காலத்தை மே 15 வரை ஒன்றரை மாதத்திற்கு அரசாங்கம் நீடித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.