செய்திகள்

உள்ளுர் மற்றும் பருவகால தென்பகுதி மீனவர்களுக்கு இடையிலான முரண்பாடுகள் (மன்னார் மாவட்டத்தினை சிறப்பாக கொண்டது)

எம். என். டியோனாஸ்

அறிமுகம்:
உலகளாவிய ரீதியில் முதன்மையான முதல் நிலை பொருளாதார நடவடிக்கையாகவும், கைத்தொழில் நடவடிக்கையாகவும் மீன்பிடி காணப்படுகின்றது. உலகின் மொத்த மேற்பரப்பில் 71மூ நீரால் சூழப்பட்டு காணப்படுகின்றது. உலகின் கரையோர நாடுகள் தமது முக்கிய பொருளாதார நடவடிக்கையாக இதனையே மேற்கொள்ளுகின்றது. அத்துடன் இந்த நாடுகளின் முதன்மையான இயற்கை வளமாகவும் இதனையே கருதுகின்றது. இந்த வகையில் நோக்கும் போது இலங்கையானது இந்து சமூத்திரத்தின் மத்தியில் மத்திய கோட்டிற்கு வட அகலாங்கு 50-100 கும் கிழக்கு நெட்டாங்கு 790-810 இடையில் அமைந்துள்ள ஒரு சிறிய தீவாகும். இலங்கையில் அனேகமான இயற்கை வளங்கள் காணப்படும் போதும் கடல் வளமே முதன்மையானதும் சிறப்பு வாய்ந்ததாகவும் பார்க்கப்படுகின்றது. அதிலும் மீன்பிடி தொழில் சிறப்பானதாகவும் பாரம்பரியமாகவும் காணப்படுகின்றது. இங்கு ஆழ்கடல், கரையோர மற்றும் நன்னீர் மீன்பிடி என்பன காணப்படுகின்றது. இதில் முதன்மையானதாகவும் நாட்டிற்கு அதிக வருவாயினை ஈட்டிதரும் முறையாக கரையோர மீன்படியே காணப்படுகின்றது. அத்துடன் இங்கு நவீன முறை, பாரம்பரிய முறை என்ற வகையிலும் மேற்கொள்ளப்படுகின்றது. அத்துடன் இலங்கையின் கரையோர நீளம் நாரா அறிக்கையின் பிரகாரம் 1739.3 k.m எனவும் கரையோர பாதுகாப்பு திணைக்களத்தின் அறிக்கையின் பிரகாரம் 1920 k.m எனவும் மதிப்பிடப்பட்டுள்ளது.

இலங்கையானது 25 நிர்வாக மாவட்டங்களை கொண்டு காணப்படுகின்றது. இதில் 14 மாவட்டங்கள் கரையோரத்தினை கொண்டதாக காணப்படுகின்றது. வட மாகாணத்தினை பொருத்தவரையில் வவுனியா தவிர்ந்த ஏனைய 4 மாவட்டங்களும் கரையோரத்தினை கொண்டதாக காணப்பாடுகின்றது. உலகளாவிய ரீதியில் இலங்கை மீன்பிடியில் தனக்கென்று ஒரு இடத்தினை வைத்திருப்பதற்கு அதனுடைய அமைவிடமே முக்கிய காரணமாகவுள்ளது. அதனுடன் கண்ட மேடை, ஆழமற்ற கடற்பரப்பு, பல்லுருவ கடற்கரை, பருவகாற்றின் செல்வாக்கு சிறந்த கழிமுகங்கள் மற்றும் பெங்குமுகங்கள் அத்துடன் சமூக பொருளாதார அரசியல் காரணிகளும் அதன் வளர்ச்சிக்கு சாதகமாக உள்ளது.

இதனை ஒத்ததாகவே இலங்கையின் முக்கியமான மீன்பிடி பிராந்தியமாக வட பகுதி காணப்படுகின்றது. இதில் குறிப்பாக மன்னார் மாவட்டமானது சிறந்த மீன் உற்பத்தி மையமாக தொன்று தொட்டு காணப்படுகின்றது. இங்கு வாழும் மக்களின் முக்கிய ஜீவனோபாய தொழிலாகவும் இதுவே காணப்படுகின்றது. மன்னாரின் மொத்த சனத்தொகை ஏறத்தாழ தற்போது 100,000 காணப்படுகின்றது. (99,051 என 2012 ம் ஆண்டு குடிசன மதிப்பீடு) இதில் 40,286 பேர் மீன்பிடி சனத்தொகையாக காணப்படுகின்றனர். அத்துடன் 11,079 மீன்பிடி குடும்பங்களும் 10,801  தீவிரமன முறையில் மீன்பிடித் தொழிலில் (active fishermen) ஈடுபடுபவர்களாக காணப்படுகின்றனர். ( 2014 டிசம்பர் கணக்கெடுப்பின் படி) மன்னார் மாவட்டத்தில் பேசாலை, எருக்கலம்பிட்டி, மன்னார், நானாட்டான், சிலாவத்துறை, மற்றும் விடத்தல்தீவு என 06 மீன்பிடி வலயங்கள் காணப்படுகின்றது. இங்கு இத்தொழில் மிகவும் சிறப்பாக வளர்ச்சியடைந்துள்ளதற்கு புவியியல், சமூக பொருளாதார அரசியல் காரணிகளும் பாரம்பரிய தொழிலாகவும் அதிக அனுபவம் கொண்ட தொழிலாக இருப்பதே முக்கிய காரணமாகவும் உள்ளது.

மன்னாரை பொறுத்தவரையில் மொத்த கரையோரமானது 164.1 k.m ஆகவும் உவர்நீர் பரப்பபானது 3828 ஹெக் ஆகவும் காணப்படுகின்றது. மன்னாரின் மீன்பிடிக்கு முக்கியமான காரணியாக காணப்படுவது கடலடித்தள மேடைகள் ஆகும். இங்கு கடற்கரையிலிருந்து கண்டமேடையின் விளிம்புவரை கடற்பரப்பு ஒடுங்கியதபகவும் சராசரியாக 22k.m அளவில் காணப்படுகின்றது. இது வடபகுதி நோக்கி கண்டமேடையானது மன்னார் விரிகுடா, பாக்குவிரிகுடா, பாக்கு நீரிணை ஆகிய பகுதிகளில் பரந்து ஆழமற்றதாக காணப்படுகின்றது. இலங்கையில் காணப்படும் முக்கிய கண்டமேடைகளாக பேதுரு, ஜோர்ஜ் கண்டமேடை மன்னார் கடலடித்தள மேடை என்பக சிறந்து விளங்குகின்றது. இதில் பேதுரு கண்டமேடை, மன்னார் கடலடித்தளமேடை எனபன வடபகுதியில் காணப்படுகின்றது. இதுவே வடபகுதி இலங்கையின் சிறந்த மீன்பிடி பிராந்தியமாக திகழ காரணமாக உள்ளது. மன்னார் கடலடித்தள மேடையானது 33.25 மஅ அகலம் கொண்டதாக இருக்கின்றது. இதுவே இலங்கையின் மிக பெரிய கண்டமேடையாகவும் காணப்படுகின்றது.

இவ்வாறு பல்வேறு சிறப்பம்சங்களை கொண்டு காணப்படும் மீன்படித்துறையில் மன்னார் மாவட்டம் மட்டும் அல்ல வட மாகாணம் முழுவதும் தொடர்ந்து பல்வேறு இடையூறுகளினை எதிர்நோக்கி வருவதை அவதானிக்க கூடியதாக உள்ளது. யுத்ததிற்கு முன்னர் இலங்கையின் முக்கியமான மீன்பிடி மையமாக வட பகுதியே காணப்பட்டது. வடபகுதியானது யுத்ததிற்கு பின்னர் சமூக பொருளாதார அரசியல் கலாசார ரீதியில் பெருமளவு பாதிப்பினை முகம்கொடுத்துள்ளது. இந்த உள்நாட்டு யுத்தமானது மீன்பிடி துறையில் பெருமளவு வீழ்ச்சியினை, பின்னடையினை ஏற்படுத்தியுள்ளது.

இலங்கையின் மீன் உற்பத்தி பெருமளவு வீழ்ச்சியினை சந்தித்த ஆண்டாக 1983, 1990, 1991 காலப்பகுதிகளினை குறிப்பிடலாம் இக்காலப்பகுதியிலே உள்நாட்டு யுத்தம் மிக தீவிரமாக காணப்பட்டமையினால் மீன் உற்பத்தியானது வட பகுதியில் வீழ்சசியினை சந்திக்க மொத்த உற்பத்தியிலும் இது பெரும் பாதிப்பினையும் பின்னடைவினையும் ஏற்படுத்தியது. இவ்வாறு யுத்தம் மட்டும் அல்லாது இந்திய இழுவை படகுகள், தென்னிலங்கை மீனவர்களின் வருகை,சட்டவிரோதமாக மீன்பிடி, சுனாமி, புயல் போன்ற இயற்கை இடர்கள் மற்றும் உட்கட்டுமான வசதிகளான சந்தைப்படுத்தல், போக்குவரத்து, பதனிடுதல் ஆகியவற்றின் பூரணமற்ற தன்மை போன்ற பல்வேறு பிரச்சனைகளினை தொடர்ந்து எதிர்நோக்கி வருகின்றனர். இதில் இன்று மிகவும் முக்கிய பிரச்சனையாகவும் பல ஆண்டுகளாக தொடரும் பிரச்சனையாகவும் முடிவு காணமுடியாத பிரச்சனையாக காணப்படுவது தென்னிலங்கை மீனவர்கள் பருவகாலங்களில் வடபகுதி நோக்கி இடம்பெயர்வது ஆகும். இந்த இடப்பெயர்வின் மூலமாக உள்ளுர் மீனவர்களுக்கும் இடம்பெயரும் தென்பகுதி மீனவர்களுக்கும் பல ஆண்டுகளாக ஒரு பனிபோர் நிகழ்ந்த வண்ணம் உள்ளது. இந்த முரண்பாடுகள் எதிர்காலத்தில் வேறு பாரிய பிரச்சனையாகவும் வாய்ப்புள்ளதை ஏற்றுக்கொண்டு தான் ஆக வேண்டும் இந்த பிரச்சனையில் மன்னார் மாவட்டத்தின் ஒரு சில இடங்கள் நேரடியாகவும் சில இடங்கள் மறைமுகமாகவும் பாதிப்பினை பல வருடங்களாக எதிர்நோக்கி வருவதனால் உள்ளுர் மக்கள் மற்றும் மீனவர்கள் தென்பகுதி மீனவர்களின் வருகையினால் எதிர்நோக்கி வரும் பிரச்சனைகளினை மையமாக கொண்டு இந்த ஆய்வு செய்யப்படுகின்றது.

ஆய்வு பிரதேசம்:

Mananr

தென்னிலங்கை மீனவர்களின் வருகையானது யுத்ததிற்கு பிற்பட்ட காலங்களில் மிகவும் அதிகரித்து செல்லுகின்றது. அவர்களின் வருகையானது பருவகாலங்களில் வடபகுதி நோக்கியதாகவே காணப்படுகின்றது. இவர்கள் மன்னார், யாழ்பாணம், முல்லைத்தீவு ஆகிய வட பகுதிகளிலும் திருகோணமலை போன்ற கிழக்கு பகுதிகளிலும் அதிகமாக இடம்பெறுகின்றது. யுத்தகாலங்களில் மிககுறைவாக காணப்பட்ட இவர்களில் பருவகால இடப்பெயர்வு யுத்தம் முடிவடைந்ததை தொடர்ந்து மிகவும் மிகவும் அதிகமாக இடம்பெறுவது வடபகுதி மக்களின் குறிப்பாக மீனவர்களின் வாழ்வாதாரத்தினை பெரிதும் பாதிப்பதாக காணப்படுகின்றது. இவர்களின் வருகையினால் அதிகம் பாதிக்கப்படும் மாவட்டமாக மன்னார் காணப்படுகின்றது.எனவே இந்த ஆய்வானது மன்னார் மாவட்டத்தினை சிறப்பாக கொண்டு மேற்கொள்ளப்படுகின்றது. மன்னார் மாவட்டத்தில் பேசாலை, எருக்கலம்பிட்டி, மன்னார், நானாட்டான், சிலாவத்துறை, மற்றும் விடத்தல்தீவு என 06 மீன்பிடி வலயங்கள் காணப்படுகின்றது. இதில் 50 மேற்பட்ட இடங்களில் மீன்பிடி தொழிலில் ஈடுபடும் கிராமங்களாக காணப்பட்டாலும் மன்னாரினை பொறுத்தவரையில் தென்பகுதி மீனவர்களின் பருவகால இடப்பெயர்வானது முக்கியமாக 4 இடங்களில் இடம்பெயர்கின்றது. தலைமன்னார் பியர், தலைமன்னார் தெற்கு (பழைய பாலம்), மன்னார் சவுத்பார் மற்றும் சிலாவத்துறை ஆகிய பகுதிகளில் இடம்பெயர்கின்றது. இந்த 4 இடங்களினையும் இவ்வாய்வுக்கான ஆய்வு பிரதேசமாக கொண்டு இவ்வாய்வானது மேற்கொள்ளப்படுதின்றது.

ஆய்வின் நோக்கம்:
இந்த ஆய்வானது பின்வரும் நோக்கங்களினை அடிப்படையில் பார்க்கப்படுகின்றது.
• மன்னார் மாவட்டத்தில் பருவகால ரீதியாக இடம்பெயரும் பிரதேசங்களைக் கண்டறிதல்.
• குறிப்பிட்ட மீனவர்கள் இடம்பெயர்வதற்கான காரணங்களினை கண்டறிதல்.
•இடம்பெயரும் மீனவர்களினால் உள்ளுர் மீனவர்கள் எதிர்நோக்கும் பிரச்சனைகளினை  வெளிக்கொண்டுவருதல்.
• முரண்பாடுகளினை தீர்ப்பதற்கான வழிகளினை கண்டறிதல்.

ஆய்வு முறையியல்:
ஒரு ஆய்வு செய்வது என்றால் ஆய்வு முறையியல் என்பது மிகவும் முக்கியமாக ஒரு விடையமாகும். இந்த ஆய்வானது சமூக விஞ்ஞான ஆய்வாக காணப்படுவதனால் முழுவதும் பண்புசார் ஆய்வாகவே இது காணப்படுகின்றது. அத்துடன் இவ்வாவுக்கான தரவுகள் முதலாம் நிலை தரவுகளாகவும் இரண்டாம் நிலை தரவுகளாகவும் பெறப்பட்டுள்ளது. முதலாம் நிலை தரவுகள் அனைத்தும் வினாக்கொத்துக்கள், களவாய்வு, நேர்காணல், குழு கலந்துரையாடல் மற்றும் நேரடி அவதானிப்புக்கள் மூலமாகவும் இரண்டாம் நிலை தரவுகள் கடற்தொழில் நீரியல் வளத்துறை திணைக்கள குறிப்புக்கள் அறிக்கைகள், மீனவகூட்டுறவு சங்க அற்க்கைகள் அவர்களின் எதிர்ப்பு கடிதங்கள் கிராம சேவையாளர் அறிக்கைகள், பிரதேச செயலக அறிக்கைகள் கடிதங்கள் கடற்படையினரின் அறிக்கைகள் சஞ்சிகைகள் பத்திரிகைகள் என பல வகையில் தரவுகள் சேகரிக்கப்பட்டுள்து.

இதில் குறிப்பாக முதலாம் நிலை தரவுகள் என்று கூறினால் வினாக்கொத்துகள் அனைத்தும் தென்னிலங்கை மீனவர்களினால்நேரடியாகவும் மறைமுகமாகவும் பாதிக்கப்பட்ட உள்ளுர் மீனவர்களிடமிருந்து பெறப்பட்டுள்ளது. இதில் குறிப்பாக நேரடியாக பாதிக்கப்படும் 5 கிராமங்களின் மீன்பிடியில் தற்போது ஈடுபடும் மீனவர்களின் 10 வீத மாதிரிகள் எடுக்கப்பட்டது. உதாரணமாக பார்த்தால் தலைமன்னார் பியர் பகுதியில் 415 மீனவர்கள் தற்போது மீன்பிடியில் ஈடுபடுகின்றார்கள் என 2014 ம் ஆண்டுக்கானகடற்தொழில் நீரியல் வளத்துறை திணைக்களம் புள்ளிவிபரம் கூறுகின்றது. அந்த வகையில் பியர் மீனவ கிராமத்தின் 10 வீத மாதிரிகள் என்றால் 41 மீனவர்களிடம் எழுமாற்றாக வினாக்கொத்து கொடுத்து தரவுகள் சேகரிக்கப்பட்டுள்ளது. இது தவிர ஆண் பெண் வீதாசாரத்தின் அடிப்படையிலும் வினாக்கொத்து கொடுக்கப்பட்டு சிறந்த முறையில் தரவுகள் பெறப்பட்டுள்ளது.

அடுத்து அவர்களின் வருகை தொடர்பான நேர்காணல்களினை தென்னிலங்கை மீனவர்களின் தலைவர்களிடமிருந்தும் அவர்களின் மூத்த மீனவர்களிடமிருந்தும் அவர்களின் செயற்பாடுகள் அவர்கள் வருகை தொடர்பான விடையங்கள், தொழில் முறைகள் படகுகளின் எண்ணக்கை அது தொடர்பான மேலதிக விடையங்கள் வாய்மொழி மூலமாகவும் மற்றும் ஆதாரங்களும் பெறப்பட்டுள்ளது. இது தவிர பெரிதும் பாதிக்கப்பட்டு வரும் மீனவ சமூகத்திடமிருந்தும் மீனவ கூட்டுறவு சங்க தலைவர் பரதிநிதிகள் ஆகியோரிடமும் நேர்காணல் செய்யப்பட்டு தரவுகள் எடுக்கப்பட்டுள்து. அத்துடன் தென்னிலங்கை மீனவாகளின் வருகை தொடர்பாகவும் அவர்களின் வருகைக்கு உள்ளுர் மீனவர்களிடையே காணப்படும் எதிர்ப்புக்களினை தொரிவித்த கடிதங்கள் ஜனாதிபதி உட்பட அரசியல் தலைவர்களுக்கு கொடுக்கப்பட்ட கடிதங்கள் அவர்கள் அனுப்பிய பதில்கள் என அனைத்தும் அவர்களிடமிருந்து பெறப்பட்டுள்ளது. இது மட்டுமல்லாது வட பகுதியில் தென்னிலங்கை மீனவர்களின் வருகையினை எதிர்த்து பத்திரிகைகளில் வெளியான விடையங்களும் 2ம் நிலை தரவுகளாக பெறப்பட்டுள்ளது.

இவ்வாறு பெறப்பட்ட தரவுகளினை அடிப்படையாக கொண்டு பகுப்பாய்வினை செய்து அவர்கள் வருவதற்கான காரணங்களினையும் அவர்கள் வருவதனால் ஏற்படும் பிரச்சனைகளினையும் அப்பிரச்சனைகளினை எவ்வாறு தீர்கலாம் என்பதனையும் இவ்வாய்வு முறையியல் மூலம் பெற்று கொள்ளவும் இவ்வாய்வுக்கான முடிவுகளையும் பெற உதவியாக காணப்படுகின்றது.

ஆய்வு முடிவுகள்
இவர்களின் இடப்பெயர்வானது இலங்கையின் தென்பகுதியிலிருந்து பெருமளவு இடம்பெருகின்றது. இவர்கள் அனேகமாக நீர்கொழும்பு, சிலாபம், புத்தளம் போன்ற பகுதிகளிலிருந்து இடம்பெருகின்றது. இதுதவிர கருக்குபன, வத்தலகுண்டு போன்ற பகுதிகளிலிருந்தும் இடம்பெயர்தனை அறியக்கூடியதாக உள்ளது. இவர்களின் இடப்பெயர்வானது யுத்திற்கு முன்னரிலிருந்து இடம்பெறுவதாக கூறப்படுகின்றது. ஏறத்தாழ 1960 களில் இருந்து இங்கு இவர்கள் இடம்பெயர்ந்து மீன்பிடியினை மேற்கொள்ளுவதாக உள்ளுர் மற்றும் தென்பகுதி மீனவர்களிடமிருந்து வாய்மொழியாக கூறுகின்றனர். அன்றிலிருந்து இன்று வரை அவர்களின் இடப்பெயர்வு தொடர்ந்த வண்ணம் உள்ளது. அத்துடன் யுத்த காலங்களிலும் அவர்களின் இடப்பெயர்வு அதிகமாக இல்லாத போதும்இடப்பெயர்வு இடம்பெற்றதாக கூறப்படுகின்றது. யுத்ததிற்கு பின்னர் இவர்களின் இடப்பெயர்வானது பெருமளவு இடம்பெற்று வருகின்றதினை அவதானிக்க கூடியதாகயுள்ளது. இந்த இடப்பெயர்வானது கடல்மார்க்கமாகவும் தரை மார்க்கமாகவும் இடம்பெறுகின்றது. தற்போது இது தரைமார்க்கமாக இதிகமாக இடம்பெற்றாலும் பழைய காலங்களில் கடல்மார்க்கமாக பல நாட்கள் பயணத்தின் மூலம் இடம்பெயர்ந்ததனையும் ஆய்வின் மூலம் அறியக்கூடியதாகவும் இருந்தது. இவ்வாறு பருவகாலங்களில் இடம்பெயரும் மீனவர்கள் மன்னாரின் சவுத்பார், தலைமன்னார் பியர், தலைமன்னார் தெற்கு (பழைய பாலம்), மற்றும் சிலாவத்துறை போன்ற இறங்குதுறைகளுக்கு தங்கள் பருவகால இடப்பெயர்வினை யுத்ததிற்கு முன்னிருந்து மேற்கொண்டு வருகின்றார்கள். இப்பிரச்சனையானது மன்னாரில் மட்டுமல்லாது முல்லைத்தீவில் கொக்குலாய், நாயாறு போன்ற பகுதிகளிலும் யாழ்பாணத்தில் வடமராட்சி கிழக்கு பகுதிகளிலும் இந்த பிரச்சனை பெருமளவு காணப்படுகின்றது. இவர்களின் வருகையின் காரணமாக உள்ளுர் மக்களுக்கு பெருமளவு வருமான இழப்பு காணப்படுவதுடன் சமூக பொருளாதார கலாசார சூழல் ரீதியிலும் முரண்பாடுகள் ஏற்பட்டு வருகின்றது.

அட்டவணை: 1
2014-2015 பருவகாலத்திற்கான மன்னாருக்கான இடப்பெயர்வு விபரம்

Table 1(இதில் தலைமன்னார் பகுதியில் 18 படகுகள் மட்டுமே பருவகால மீனவர்களின் படகுகளாகவும் ஏனைய 9 படகுகள் உள்ளுர் மீனவர்களினால் விலைக்கு வாங்கப்பட்டுள்ளது என மீ.கூ.சங்கத்தின் தலைவரிடமிருந்து அறியக்கூடியதாக உள்ளது.)

1975ம் ஆண்டு தென்பகுதி மீனவர்கள் பருவகாலத்தில் தொழிலுக்காக சராசரியாக 30 படகுகளில் மட்டுமே வந்து சவுத்பார் பகுதியில் வாடிகளினை அமைத்து தொழில் புரிந்து வந்துள்ளார்கள். இவர்கள் பருவகாலம் முடிவடைந்ததும் வாடிகளினை பிரித்துக்கொண்டு தருமிபி செல்லுவது வழக்கம். ஆனால் இது தொடர்ந்து வந்த காலங்களில் குறிப்பாக யுத்தத்தின் பின் மிகவும் அதிகரித்தமையினால் உள்ளுர் மீனவர்களுக்கு அது பெரும் பிரச்சனையாக மாறியுள்ளது. யுத்தகாலங்களில் 1994ம் ஆண்டு சுமார் 40 படகுகளும் 2000ம் ஆண்டுக்கு பின் 50-60 படகுகளும் 2004ம் ஆண்டு 75-80 படகுகளும் 2009-2011 வரை 100 படகுகளும் சவுத்பார் பகுதியில் தொழிலில் ஈடுபட்டுள்ளது. அதேவேளை சிலாவத்துறை பகுதியயில் 2013 ம் ஆண்டுகளில் 105 படகுகளும் 2012ம் ஆண்டில் 110-120 படகுகளும் பருவகால தொழிலில் ஈடுபட்ட தென்பகுதி படகுகளாக காணப்பட்டுள்ளது.

Southern Fishing areas

இவர்களின் இடப்பெயர்வுக்கான காரணங்களினை நோக்கும் போது முக்கிய காரணியாக பருவகாற்று காணப்படுகின்றது. இலங்கையினை பெறுத்தவரையில் வடகீழ், தென்மேல் பருவகாற்றுக்கு உட்பட்ட நாடாக காணப்படுகின்றது. மீன்பிடிக்கு இப்பருவ காற்றானது மிகவும் முக்கியமான பங்களிப்பினை செய்கின்றது. மன்னாரினை பெருத்த வரையில் வடகீழ் காற்று (வாடை காற்று) வீசும் காலங்களிலேயே அதிக மீன்பிடியினை பெறும் காலமாக காணப்படுமின்றது தென்மேல் காற்று ( சோள காற்று ) வீசும் காலங்களில் மீன்பிடியானது பெரும் வீழ்ச்சி அடைந்து காணப்படும். இவ்வாறு இருக்கும் போது தென்பகுதி மீனவர்களின் இடப்பெயர்வும் ஐப்பசி-ஏப்பல் காலங்களிலேயே இடம்பெருகின்றது. இதுவே அதிக மீன்பிடி உள்ள காலமாகவும் இருக்கின்றது.

மன்னாரினை பெறுத்தவரையில் வடகடல், தென்கடல் என இரு கரையோரங்களையும் கொண்டுள்ளது. வடகீழ் காற்று (வாடை காற்று) வீசும் காலங்களில் வட கடல் பகுதிகளில் காற்றின் வேகம் உயர்வாக காணப்படுவதனால் அலைகளின் வேகமாக காணப்படும் இதனால் படகுகளினை இறங்கு துறைகளில் நிறுத்துவது மிகவும் கடினமாகதாகவும் சிக்கல் நிறைந்ததாகவும் இருப்பதனால் அவர்களுக்கு சொந்தமான தென்கடலினை தங்கள் இறங்கு துறையாகவும் பயன்படுத்துவது வழக்கம். இவ்வாறே தென்பகுதி மீனவர்களும் மன்னாரில் காணப்படும் பிரதான தென்கடல்களான தலைமன்னார் தெற்கு, சவுத்பார், சிலாவத்துறை போன்ற பகுதிகளினை அவர்களின் பருவகால இடப்பெயர்வினை மேற்கொண்டு அவர்களின் இறங்குதுறைகளாக பயன்படுத்துகின்றார்கள்.
அவர்கள் இங்கு வருவதற்கு இன்னுமோரு காரணம் நீர்கொழும்பு, சிலாபம் போன்ற பகுதிகளில் படகுகளின் எண்ணிக்கை மிக மிக அதிகமாக காணப்படுவதனால் தொழில் போட்டி காரணமாகவும் இவர்களின் வருகை காணப்படுகின்றது. அத்துடன் அவர்கள் 3 தலைமுறையாக இடப்பெயர்வினை மேற்கொண்டு மன்னாரில் மீன்பிடியில் ஈடுபடுவதனால் தங்கள் சொந்த பகுதியில் மீன்பிடியினை மேற்கொள்ளுவது போன்று மிகவும் நேர்த்தியாகவும் அனுபவ ரீதியாகவும் சிறந்த மீன்பிடியாளர்களாக விளங்குகின்றார்கள். இதனைவிட இவர்கள் இடம்பெயரும் குறிப்பிட்ட இறங்குதுறைகளில் உள்ளுர் மீனவர்களின் செல்வாக்கானது மிகவும் குறைவாகவே காணப்படுகின்றது. அத்துடன் இவர்களின் படகுகளின் எண்ணிக்கைகள் குறைவானவே உள்ளது. தலைமன்னார் தெற்கு 20 படகுகளும், சவுத்பாரில் 59 படகுகளும் சிலாபத்துறை 23 மற்றும் சவரியார்புரம் 80 என்ற அளவிலும் படகுகள் காணப்பட்டாலும் இதிலும் தொழிலில் ஈடுபடுவது மிகவும் குறைவாகவே காணப்படுகின்றது. இதுவும் அவர்களின் வருகையினை மேலும் அதிகரிக்க வாய்ப்பினை ஏற்படுத்தி கொடுத்துள்ளது. இதில் தலைமன்னார் தெற்கு, சவுத்பார் போன்ற பகுதிகளில் உள்ளுர் மீனவர்களின் படகுகளினை விட தென்பகுதி மீனவர்களின் தொழிலில் ஈடுபடும் படகுகள் அதிகமாக இருப்பது கவனிக்க வேண்டிய ஒரு விடயமாகவும் உள்ளது.

இவ்வாறு தென்பகுதி மீனவர்களின் வருகையினால் உள்ளுர் மக்களுக்கு அவர்களுக்கும் முரண்பாடுகள் அடிக்கடி ஏற்பட்டு வருகின்றது. அவர்களின் வருகையினால் உள்ளுர் மீனவ சமூகம் எவ்வாறான பிரச்சனைகளினை எதிர்கொள்ளுகின்றார்கள் என்பதனை ஆராய்வது எமது ஆய்வின் முக்கிய நோக்கமாக காணப்படுகின்றது. இந்த வகையில் உள்ளுர் மீனவ சமூகமானது சமூக பொருளாதார அரசியல் கலாசார சூழல் ரீதியிலான பாதிப்பினை எதிர்கொள்ளுகின்றார்கள் ஆய்வின் மூலம் கண்டறியப்பட்டுள்ளது. அதிலும் சிறப்பாக சமூக மற்றும் பொருளாதார பிரச்சனைகளினையே முதன்மையாக கருதுகின்றார்கள்.

சமூக பிரச்சினை:

நிரந்தர குடியேற்றம்: தென்பகுதி மீனவர்களின் நிரந்தர குடியேற்றமானது தற்போது வரத்தொடங்குகின்றது. ஒரு சிலர் மன்னாரில் அவர்கள் மீன்பிடியினை மேற்கொள்ளும் பகுதிகளில் காணி நிலங்களினை வாங்கி நிரந்தர குடியிருப்புக்களினை அமைத்து வருகின்றார்கள். இது தலைமன்னார் பியர் பிரதேசத்தில் தற்போது இடம்பெற ஆரம்பித்துள்ளது. இதற்கு ஒரு முக்கிய காரணமாக இருப்பது தென்பகுதி மீனவர்களின் வருகையானது பியரினை பெருத்தவரையில் கலாசாரமாக மாறிவிட்டது. அத்துடன் திருமணத்தொடர்புகளும் அதிகரித்து வருவது அவர்களின் நிரந்தர குடியேற்றத்திற்கு காரணமாக உள்ளது. அத்துடன் யுத்த காலங்களில் பியர் பகுதியிலிருந்து அனேகர் நீர்கொழும்பு பகுதிக்கு இடம்பெயர்ந்து தற்போது மீண்டும் பியரில் குடியேறும் போது அவர்களுடன் சேர்ந்து சில நிரந்தர குடியேற்றம் ஏற்பட வாய்ப்பளித்துள்து. அதேவேளை மன்னாரின் செல்வபுரம் எனும் குடியேற்ற திட்டத்தில் பாதுகாப்பு படையினின் உதவியுடனும் ஒரு சில தென்பகுதி மீனவர்களுக்கு குடியிருப்புக்கள் வழங்கப்பட்டுள்ளது.

இடப் பிரச்சினை:

தென் பகுதி மீனவர்களின் வருகையினால் உள்ளுர் மீனவ சமுகம் எதிர்நோக்கும் முக்கிய முதன்மையான பிரச்சனையாக இது காணப்படுகின்றது. இடப்பிரச்சனையில் இறங்குதுறை தொடர்பானதே முக்கியம் பெறுகின்றது. மன்னாரை பெறுத்தவரையில் படகுகளின் எண்ணிக்கை வருடா வருடம் அதிகரித்து செல்லுகின்றது. மன்னாரில் ஆருடுவுஐஇ ஐனுயுலுஇ ழுகுசுPஇ ஆவுPடீஇ Nவுசுடீஇ Nடீளுடீ என படகுகள் காணப்படுகின்றது. இதில்ழுகுசுP வகையே அதிகளவு மீன்பிடிக்கு பயன்படுத்தப்படுகின்றது. 2010 ல் 2346 இருந்த மொத்த படகுகள் 2011 ல் 2652 ஆகவும், 2012ல் 3858 ஆகவும்,2013 ல் 3381ஆகவும், 2014 ல் 3390 ஆகவும் மிக வேகமாக அதிகரித்து செல்கின்றது. எனவே படகுகள் அதிகரித்து செல்லும் போது உள்ளுர் மீனவர்களுக்கே இறங்குதுறை பெரும் பிரச்சனையாக உள்ள இந்த சூழ்நிலையில் தென்பகுதி மீனவர்களின் வருகையும் அதிகரிக்கும் போது இறங்குதுறை தொடர்பான பிரச்சனைகள் ஏற்பட பெருமளவு சந்தர்ப்பம் ஏற்படுகின்றது. தற்போது தலைமன்னார் பியர் பிரதேசத்தில் இந்திய- இலங்கை கப்பல் சேவை தொடங்கும் போது உள்ளுர் மீனவர்கள் தற்போது இறங்குதுறையாக பயன்படுத்தும் இடத்தினை விட்டு விலகி செல்லவேண்டிய கட்டாயம் காணப்படுகின்றது. இதனால் தற்போது தென்பகுதி மீனவர்கள் இறங்குதுறையாக பயன்படுத்தும் இடத்திற்கு செல்லவேண்டிய தேவை ஏற்படும் போது அது பிரச்சனையினை தோற்றுவிக்கும் அபாயமும் உள்ளது.

வாடிகள் தொடர்பான பிரச்சனை:

இது தற்போது பெரிதாக பேசப்படும் ஒரு பிரச்சனையாக காணப்படுகின்றது. மன்னார் மாவட்டத்திற்குறிய கடற்தொழில் அதிகாரிகள், மற்றும் உள்ளுர் மீனவர் சங்கங்கள் தென்பகுதி மீனவர்களின் பருவகாலம் முடிவடைந்தவுடன் தங்கள் பிரதேசத்திற்கு செல்லும் போது தங்களால் அமைக்கப்பட்ட வாடிகளினை அகற்றிவிட்டு செல்ல வேண்டும் என கூறியுள்ள போதும் அவர்களினால் அதனை செயற்படுத்துவதாக இல்லை. இது தொடர்பாக அவர்களிடம் கேட்ட போது ‘வாடி ஒன்று அமைப்பதற்கு குறைந்த படசம் 30000- 50000 வரை செலவு ஏற்படுவதாகவும் வருடா வருடம் இவ்வளவு பணத்தினை வாடிகளுக்காக செலவு செய்யமுடியாது என கூறுகின்றார்கள். அதுமட்டும் அல்லாது அடுத்த பருவத்திற்கு வரும் போது வாடி அமைப்பது தொடர்பாகவும் இடப்பகிர்வு தொடர்பாகவும் ஏற்படும் பிரச்சனைகளினை தவிர்த்து கொள்வதற்காக வாடிகளினை அகற்ற மாட்டோம்;’ என கூறுகின்றனர். அத்துடன் வாடிகளினை அமைப்பதற்காக உரிய அனுமதி பத்திரங்களினை முசலி பிரதேச செயலகத்திலிருந்து சிலாபத்துறை தென்பகுதி மீனவர்கள் 1000ரூபாய்க்கு வருடாவருடம் புதிப்பிப்பது குறிப்பிடத்தக்கது அதேபோல தலைமன்னார் தெற்கு மீனவர்களும் வாடிகளுக்கான அனுமதி பத்திரங்களினை வைத்திருக்கின்றார்கள்.

Vadikal and Padakukal

அத்துடன் அடுத்த பருவத்தில் வரும்போது தங்கள் வாடிகளுக்கு சேதம் ஏற்பட்டாலும் அதற்கான நஷ்டத்தினை கேட்க மாட்டோம் எனவும் கூறியுள்ளனர். ஆயினும் பாதுகாப்பு படையினர் அதிகமாக அவர்களின் வாடிகளினை பாதுகாத்து வருகின்றனர். அவர்கள் இல்லாத அதாவது தென்பகுதி மீனவர்கள் தங்கள் பருவம் முடிவடைந்ததும் தங்கள் சொந்த இடங்களுக்கு செல்லுகின்ற காலங்களில் சவுத்பார் பகுதிகளில் உள்ளுர் மீனவர்கள் பாதுகாப்பு படையினரால் தென்பகுதி மீனவர்களின் வாடி உள்;ள பகுதிகளுக்கு அனுமதிக்கப்படுவதில்லை என சவுத்பார் மீனவர்கள் கூறுகின்றனர்.

பொருளாதார ரீதியான பிரச்சனைகள்:

இதனை தொடர்ந்து காணப்படும் முக்கியகான பிரச்சனையாக இருப்பது பொருளாதார ரீதியான பிரச்சனையாக உள்;ளது. மீன்பிடி என்பது ஒரு முதல்தர பொருளாதார நடவடிக்கையாகும். எனவே அவர்களின் வருகையானது பெரிதாக பாதிக்கும் தன்மை காணப்படுகின்றது. மன்னாரினை பொருத்தவரையில் குறிப்பிட்ட பருவத்திலேயே அதிகமான மீன்பிடி காணப்படுகின்றது. அந்த வாடை பருவத்தினை நம்பியே உள்ளுர் மீனவர்கள் வாழ்கின்றார்கள். இப்பருவத்திலேயே தென்பகுதி மீனவர்களின் இடப்பெயர்வும் ஏற்படுவதனால் உள்ளுர் மீனவர்களின் பொருளாதாரம் பெருமளவு பாதிக்கின்றது. சிலாவத்துறை போன்ற பகுதிகளில் உள்ளுர் மீனவர்களுக்கு அவர்கள் வருவதனால் எந்தவிதமான நன்மைகளும் வருமானங்களும் இல்லை என்று கூறுகின்றார்கள். அவர்களும் உள்ளுர் மக்களுடன் சேர்ந்து மீன்பிடியினை மேற்கொள்ளும் போது அதிகரித்த மீன்பிடியினால் மீனுக்கான கேள்வி குறைந்து விலையும் வீழ்ச்சி அடைகின்றது. அத்துடன் அவர்கள் செக்கல், வெளுப்பு என்று செல்லப்படும் இரவு மற்றும் அதிகாலை தொழில்களில் ஈடுபடுவதனால் அவர்களின் மீனகள் விரைவாக சந்தை படுத்தப்படுவதனால் உள்ளுர் மீனவர்களின் மீன்களுக்கு உரிய சந்தையினை பெறமுடியாதுள்ளது. அத்துடன் சவுத்பார், பியர் பகுதிகளில் இரு தரப்பினரும் வேறுபட்ட வலைகளினை பயன்படுத்துவதனால் பெரிய அளவில் பாதிப்பு ஏற்படாத போதும் சிலாவத்துறை பகுதியில் ஒரே வலைகளினை பாவிக்கப்படுவதினால் பாதிப்புக்கள் காணப்படுகின்றது. அதாவது தென்பகுதி மீனவர்கள் வராதபோது குறைந்த எரிபொருள் செலவில் பிடிக்கவேண்டிய மீனகளினை கூடிய செலவில் கூடிய எரிபொருளினை பயன்படுத்துவது உள்ளுர் மீனவர்களின் வருவாயினை பாதிக்கின்ற ஒரு விடையமாக காணப்படுகின்றது.

இவ்வாறு வருமானத்தில், பொருளாதாரத்தில் பாதிப்புக்கள் காணப்பட்டாலும் உள்ளுர் கூலித்தொழிலாளிகள், வறுமையில் வாடும் மீனவ பெண்களுக்கு இவர்கள் வரும் காலம் அவர்களின் வறுமையினை தீர்க்கும் காலமாகவும் காணப்படுகின்றது. அத்துடன் சில உள்ளுர் மீன் ஏற்றுமதியாளர்களுக்கும் அவர்களின் வருகை இலாபகரமாகவும் உள்ளது. அதே போல உள்ளுர் கடைகள் மற்றும் வணிக மையங்களிற்கும் இவர்களின் வருகின்ற காலங்களில் அதிக லாபகரமானதாகவுள்ளது.இந்த வகையில் பார்க்கின்ற போது பொருளாதார ரீதியில் பாதிப்பு காணப்பட்டாலும் ஒரு சில நன்மைகளும் காணப்படுகின்றது.

ஏனைய பிரச்சினைகள்:

இது தவிர அரசியல் ரீதியான முரண்பாடுகளும் அரசியல் ஏற்றத்தாழ்வுகளும் காணப்படுவதனை இன, மொழி ரீதியான விட்டு கொடுப்புக்களினையும் காணக்கூடியதாக உள்ளது. இந்த பிரச்சனையினைக்கு அரசியல்வாதிகள் பெருமளவு முக்கியத்துவம் கொடுப்பதாக தெரியவில்லை. அதாவது இந்திய மீனவர்களின் பிரச்சனைக்கு கொடுக்கும் முக்கியத்துவத்தில் ஒரு சிறிய பங்கு கூட இந்த பிரச்சனைக்கு கொடுக்கவில்லை எனறு தான் கூறவேண்டும். இந்திய மீனவர்களின் வருகை பொருளாதார தாக்கத்தினை மட்டுமே உள்ளுர் மக்களுக்கு கொடுக்கின்றது. மாறாக தென்னிலங்கை மீனவர்களின் சமுக பொருளாதார கலாசார ரீதியிலும் பாதிப்பினை ஏற்படுத்திவருகின்றது. உள்ளுர் மீனவ சங்கங்கள் தென்னிலங்கை மீனவர்கள் வருகையினை கட்டுபடுத்த கோரி பல கடிதங்கள், போராட்டங்கள், மனுக்கள் போன்றவற்றை ஜனாதிபதி, முதலமைச்சர், வட மாகாண மீன்பிடி அமைச்சர் என பல தரப்பினர்களுக்கு கொடுத்தாலும் அதற்கான பதில் கடிதங்கள் மட்டுமே அன்றுவரை வருகின்றதே தவிர எந்தவிதமான ஆக்குபூர்வமான நடவடிக்கைகளும் முன்னெடுக்கப்பட்டதாக தெரியவில்லை. இதனால் பாதிக்கப்படும் மன்னார் மக்களுக்கு இப்பிரச்சனைக்கு அரசியல் ரீதியான தீர்வு இன்னும் கிடைக்காமல் இருப்பது கவலையளிக்ககூடிய விடையமாகவே பார்க்கப்படுகின்றது. கடற்தொழில் அதிகாரிகள் அவர்களுக்கு எதிராக எதாவது நடவடிக்கை எடுக்க முற்படும் போது அரசியல் தலையீட்டினால் அவை அனைத்தும் தடுக்கப்படும் தன்மையும் இங்கு காணக்கூடியதாக உள்ளது.

அடுத்த முக்கியமான பிரச்சனையாக இருப்பது சூழல் ரீதியான பிரச்சனையாக காணப்படுகின்றது. மன்னார் பிரதேசத்தில் வேறு பிரதேசத்தினை சேர்ந்த தென்னிலங்கை மீனவர்களின் வருகையினால் அதிகரித்த மீன்பிடியினாலும் கடல் சூழலானது பெருமளவு பாதிக்கப்படுகின்றது. அத்துடன் இயந்திர படகுகளின் எண்ணிக்கை அதிகரித்து செல்லும் போது கடல்மாசடைவும் ஏற்படுகின்றது. ஆயினும் ஒரு முக்கியமான விடையமாக காணப்படுவது இவர்கள் எந்த விதமான சட்டவிரோதமான மீன்பிடிகளையும் மேற்கொள்ளுவது இல்லை என்பதே உள்ளுர் மீனவர்களின் கருத்தாக உள்ளது. இவர்கள் வலை, மற்றும் தூண்டில் போன்ற முறைகளினையே பயன்படுத்துகின்றனர். இதன் காரணமாக சூழல் ரீதியான பாதிப்புக்கள் மிகவும் குறைவாகவே காணப்படுகின்றது என்பதனை ஏற்றுக் கொண்டுதான் ஆகவேண்டும். மன்னார் கடல் பிராந்தியத்தின் கடல் மாசாக்கத்திற்கு முக்கியமான காரணம் இந்திய மீனவர்களின் இழுவைப்படகுகளும் மற்றும் மன்னார் மீனவர்கள் பயன்படுத்துகின்ற சட்டவிரோதமான மீன்பிடி முறைகளாக இழுவைபடகுகள், டைனமோட் பாவனை, சிலிண்டர் பாவனை, சட்டத்திற்கு புரம்பான வலைகள,; கணவாய் பத்தை போன்றனவே கடல் மாசடைவிற்கு காரணமாகவுள்ளது.

Nets

தென்னிலங்கை மீனவர்களில் அனேகமானவர்கள் கத்தோலிக்க மதத்தினை பின்பற்றுபவர்களாகவே காணப்படுகின்றார்கள். இதன் காரணமாக மத ரீதியான பிரச்சனைகள் எதுவும் ஏற்படுவதில்லை. காரணம் மன்னாரினை பொறுத்தவரையில் கத்தோலிக்க சமயத்தினை பின்hற்றுபவர்களாகவே அதிகமானவர்கள் காணப்படுகின்றார்கள். இதன் காரணமாக மத ரீதியான பிரச்சனைகள் வரவாய்ப்பு மிக குறைவாகவே காணப்படுகின்றது. தலைமன்னார் பியரினை பொறுத்தமட்டில் அங்கு காணப்படும் 2 தேவாலயங்களில் ஒன்றில் ஆண்டு திருவிழா திருப்பலி தென்னிலங்கை மீனவர்களினை முதன்மை படுத்தியும் அவர்களின் செலவில் மிகவும் விமர்சையாக கொண்டாடப்படுவது வழக்கமாகவும் காணப்படுகின்றது. அவ்வாரே அவர்கள் இடம்பெயரும் இடத்திற்கு அண்மித்த பகுதியிலுள்ள தேவாலயங்களில் அவர்கள் தங்கள் வழிபாடுகளினை செய்து வருகின்றார்கள். ஆனால் சிலாவத்துறை பகுதியினை பொறுத்தமட்டில் இஸ்லாமியர்களினை அதிகமாக கொண்ட பகுதியாக காணப்படுவதினால் அங்கு மாத்திரம் ஒருசில சிறியளவிலான பிரச்சனைகள் ஏற்படுகின்றதாக அங்குள்ள மீனவர்கள் கூறுகின்றார்கள்.

இவ்வாறான பல பிரச்சனைகள் தென்னிலங்கை மீனவர்களின் வருகையினால் உள்ளுர் மீனவர்களுக்கு மட்டுமல்லாது முழு சமூகத்திற்கும் இதனால் பாதிப்பு ஏதோ ஓரு வகையில் ஏற்பட்டுவது என்பதனை ஏற்றுக் கொண்டுதான் ஆக வோண்டும். எனவே தென்னிலங்கை மீனவர்களின் வருகையினை கட்டுபடுத்த வேண்டியது அவசியமான ஒரு விடையமாக பார்க்கப்படுகின்றது.

மன்னாரினை பொருத்தவரையில் பனங்கட்டுகொட்டில் என்ற மீனவ கிராமமானது இந்த பிரச்சனையினை பெரிதும் முக்கியப்படுத்தி தொடர்ந்து போராடி வருகின்றது. இந்த பனங்கட்டுகொட்டில் பிரதேசத்திற்கு உட்பட்டதாகவே சவுத்பார் பிரதேசம் காணப்படுவது குறிப்பிடத்தக்கது. இவர்கள் தென்னிலங்கை மீனவர்கள் வருவதை தடுப்பதற்கு பல முயற்சிகளை எடுத்துள்ளார்கள். இதில் முக்கியமாக ஜனாதிபதிக்கு இப்பிரச்சனை தொடர்பாக கடிதம் எழுதியுள்ளார்கள். அதற்கு பதிலும் ஜனாதிபதி செயலகத்திலிருந்து பிரச்சனைக்கான தீர்வு காணுவதாக வந்துள்ளது. இது தவிர வடமாகாண முதலமைச்சர், அரசாங்க அதிபர், கடற்தொழில் அமைச்சர் என அனைத்து தரப்பினருக்கும் தமது எதிர்ப்பினை தொடர்ந்து காட்டிய வண்ணம் உள்ளனர் ஆனாலும் எந்த விதத்திலும் முடிவு எட்டப்படும் தன்மையினை காணக்கூடியதாக தெரியவில்லை.

அடுத்ததாக சிலாபத்துறை பிரதேசத்திதை பார்த்தால் இங்கு சிலாபத்துறை சவரியார்புரம் ஆகிய பகுதிகள் இதனால் பாதிக்கப்படும் போதும். இங்கும் இவர்களின் வருகைக்கு தொடர்ந்து எதிர்ப்பு காணப்படுகின்றது. இவர்களே வாடிகளினை கட்டாயமாக அகற்றிவிட்டு செல்லவேண்டும் என்பதில் உறுதியாக உள்ளனர். இவர்களும் தென்னிலங்கை மீனவர்களின் வருகைக்கு எதிராகவும் வருகையினை குறைக்கவும் கோரி மனுக்களை கொடுத்து வருகின்றனர். இதில் காணப்படும் மற்ற கிராமமான சவரியார்புரத்தில் எதிர்ப்பு கடிதங்கள் கொடுக்காத போதும் சிலாபத்துறை சங்கத்துடன் இணைந்தது தொடந்து எதிர்ப்பினை காட்டிவருகின்றது.

தலைமன்னார் பியர் மற்றும் தலைமன்னார் தெற்கு பகுதிகளில் இடம்பெயரும் மீனவர்களுக்கு எதிர்ப்பு காணப்படும் போதும் அது பெரிய அளவில் காணப்படுவதாக தெரியவில்லை. தலைமன்னாருக்கு வரும் தென் மீனவர்கள் ஒருபருவம் பியர் பகுதியிலும் (சோள பருவம் தென்மேல் பருவம்) அடுத்த பருவத்தில் தரைமன்னார் தெற்கு பகுதியிலும் மாறிமாறி தொழிலினை மேற்கொண்டு வருகின்றார்கள். அதுமட்டும் இல்லாமல் அவர்களின் வருகை தற்போது ஒரு கலாசாரமாக மாறிவிட்டது என்றுதான் கூறவேண்டும். அத்துடன் திருமணத் தொடர்புகளும் அதிகரித்து வருகின்ற படியினால் தலைமன்னாரில் எதிர்ப்பு பெருமளவு காணப்படவில்லை என்று தான் கூறக்கூடியதாக உள்ளது.

ஆய்வின் தீர்வுகள்:
இந்த ஆய்வானது தற்போதய சூழலில் மிகவும் முக்கியமான ஒன்றாக காணப்படுகின்றது. வடக்கு கிழக்கு கரையோர பகுதிகளில் இந்திய மீனவர்களின் அத்துமீறிய மீன்பிடி தொடர்பான பிரச்சனைக்கு அடுத்த பெரிய பிசை;சனையாக காணப்படுவது இந்த தென்னிலங்கை மீனவர்களின் பருவகால இடப்பெயர்வாக காணப்படுகின்றது. இந்த வகையில் இந்த ஆய்வானது மேற்குறிப்பிட்ட நோக்கங்களினை அடிப்படையாக கொண்டு மேற்கொள்ளப்பட்டு முடிவுகள் பெறப்பட்டுள்ளது. இவ்வாய்வின் முக்கிய நோக்கமாக காணப்படும் தென்னிலங்கை மீனவர்களின் வருகையினால் உள்ளுர் மக்கள் குறிப்பாக உள்ளுர் மீனவர்கள் எதிர்நோக்கும் பிரச்சனைகளினையும் அந்த பிரச்சனைகளினை தீர்ப்பதற்கு எவ்வாறான முயற்சிகளினை எடுக்கலாம் என்றும் எவ்வாறான முயற்சிகள் எடுக்கப்பட்டுள்ளது என்பதனையும் அவர்களின் வருகைளினை எப்படி கட்டுபடுத்தலாம் என்பதனையும் அவ்வாய்வு மூலம் அறியக்கூடியதாக உள்ளது.

அவர்களின் வருகையினை கட்டுபடுத்துவதற்கான வழிகள்:
தென்னிலங்கை மீனவர்களின் வருகையினால் உள்ளுர் மீனவர்களுக்கு மட்டுமன்றி முழு வடபகுதி மக்களுக்கும் ஏதோவோரு வகையில் பாதிப்புக்கள் ஏற்படுவதனை ஏற்றுக்கொண்டுதான் ஆக வேண்டும். எனவே தென்னிலங்கை மீனவர்களின் வருகையினை கட்டுபடுத்த வேண்டியது அவசியமான ஒரு விடையமாக பார்க்கப்படுகின்றது. அடுத்ததாக அவர்களின் வருகையினை எவ்வாறு கட்டுபடுத்தலாம் என்று பார்போமானால்,அவர்களின் வருகையினை தற்போதய சூழ்நிலையில் முழுமையாக கட்டுபடுத்துவது மிகவும் கடினமான விடையமாகவும் தற்போதைக்கு சாத்தியமற்ற விடையமாகவே இருக்கின்றது. ஆனாலும் அவர்களின் வருகையினை கட்டுபடுத்தவும் குறைக்கவும் பின்வரும் யோசனைகள் பயனுள்ளதாக இருக்கும் என ஆய்வின் மூலம் கண்டறியப்பட்டுள்ளது.

• படகுகளின் வருகையினை வரையறுத்தல்: இது தற்போதய நிலையில் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகின்றது. உதாரணமாக பார்க்கும் போது சவுத்பார் மற்றும் சிலாபத்துறை பகுதிகளில் தென்னிலங்கை படகுகளின் வருகையினை 65 ஆகவும் தலைமன்னார் பகுதிகளில் 18 ஆகவும் மட்டுபடுத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது. இது தற்போது அவர்களினால் முழுமையாக ஏற்றுக்கொள்ள முடியாவிட்டாலும் தற்போது அவர்களின் வருகை வீழ்ச்சியடைந்து வருவதை தரவுகள் மூலம் அறியக்கூடியதாகவுள்ளது. குறிப்பாக சவுத்பார் பகுதியில் 2012 ல் நீர்கொழும்பிலிருந்து 80 படகுகளும் சிலாபத்திலுவுருந்து 36 படகுகளாக 116 படகுகள் மன்னாருக்கு வந்துள்ளது. ஆனால் 2015 ல் 61 ஆக குறைந்துள்ளது. அனுமதிக்கப்பட்ட படகுகளுக்கு மட்டும் வருவதற்கு அனுமதி கொடுக்க வேண்டும். புதிதாக வரும் எந்த படகுகளுக்கும் அனுமதி கொடுக்ககூடாது. 06.11.2012 ம் ஆண்டு மன்னார் அரச அதிபர் தலைமையில் நடைபெற்ற மாவட்ட கடற்தொழில் அபிவிருத்தி குழு கூட்டத்தில் சவுத்பார் பகுதியில் 108 படகுகளும் சிலாவத்துறை பகுதிகளில் 55 படகுகளும் தலைமன்னார் தெற்கு பழைய பாலம் பகுதியில் 65 படகுகளுக்கு தொழிலில் ஈடுபட அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இதற்கு அதிகமாக வரும் படகுகளினை முழுமையாக தடுக்கவேண்டும்.

• காலத்தினை வரையறுத்தல்: இவர்களின் வருகையானதுஐப்பசி- ஏப்ரல் மாதங்களில் அதிகளவில் இடம்பெறுகின்றது. இக்காலம் முடிவடைந்தவுடன் அவர்களினை உடனடியாக அவர்களின் சொந்த இடத்திற்கு போகுமாறு அழுத்தம் கொடுக்க வேண்டும். அதே போலவே குறிப்பிட்ட காலத்திற்கு முன்னரும் அனுமதிக்ககூடாது. இது தற்போது முசலி பிரதேச சபைக்கு உட்பட்ட சிலாபத்துறை பகுதியில் இது கண்டிப்பாக பார்க்கப்படுகிறது. அவர்களுக்கான காலம் ஐப்பசி15 – ஏப்ரல்15 வரை அனுமதிக்கப்படுகின்றது. அதற்கு பிறகும் தொடர்ந்து அவர்கள் இருக்கும் போது போராட்டம் நடத்த போவதாகவும் கூறியுள்ளார்கள். ஆயினும் தென்பகுதி மீனவர்களுக்கு பாதுகாப்பு படையினரின் ஒத்துழைப்பு கிடைப்பதனால் போராட்டங்களினை தொடர்ந்து செய்யமுடியாதுள்ளது.

• அரசியல் மூலமான தீர்வு காணுவதே இதற்கான மிக சிறந்த முடிவாக இருக்கும்

• இது தவிர முக்கியமான தீர்வாக காணப்படுவது அவர்கள் அதிகமாக இடம்பெயரும் பகுதிகளிலினை நோக்குவோமானால் இங்கு உள்ளுர் மீனவர்களின் செல்வாக்கானது மிகவும் குறைவாக காணப்படுகின்றது. எனவே குறிப்பிட்ட பகுதிகளில் உள்ளுர் மீனவர்களின் எண்ணிக்கையினை அதிகரிக்க வேண்டும். அதோடு உள்ளுர் மீனவர்கள் அதிகமாக அந்த பகுதிகளில் வாடிகளினை அமைத்து தொடர்ந்து தொழில் ஈடுபடுப் போது அவர்களின் வருகையினை கட்டுபடுத்தலாம்.

• உள்ளுர் மீன் ஏற்றுமதியாளர்கள் தென்பகுதி மீனவர்களின் மீன்களிளை கொள்வனவு செய்யகூடாது.

• தென்பகுதி மீனவர்களுக்கு உள்ளுரில் எரிபொருள் வழங்க கூடாது.

இவ்வாறான ஒரு சில நடவடிக்கைகளினை முன்னெடுப்பதன் மூலம் அவர்களின் வருகையினை படிப்படியாக கட்டுபடுத்தலாம். அதனை தொடர்ச்சியாக செய்யும் போது காலப்போக்கில் அவர்களின் வருகையினை முழுமையாக கட்டுபடுத்த முடியும்.

இந்த வகையில் பார்க்கும் போது வட பகுதியானது ஏற்கனவே யுத்தம் இயற்கை அனர்த்தம் இந்திய மீனவர்களின் வருகை என பல கோணத்தில் கடல் வளத்தினை இழந்து வரும் சூழ்நிலையில் தென்னிலங்கை மீனவர்கள் பருவகாலங்களில் தொடர்ந்து இங்கு வருவதும் எமது கடல் வளங்களினை வாரி செல்வதும் எமது உள்ளுர் மீனவர்களினை பாதிக்கும் அதே வேளை எதிர்கால சந்ததியினருக்கும் இது தொடர்ந்து பாதிப்பினை எதிர்நோக்கவேண்டியிருக்கும். அவர்களும் எமது நாட்டினை சேர்ந்தவர்களாக காணப்பட்டாலும் எமது பிராந்திய மக்களின் வாழ்வாதாரத்தினை பாதிப்பதாக அவர்களின் வருகையானது காணப்படுகின்றது. எமது வடபகுதி மக்கள் இவ்வாறு குழுவாக சேர்ந்து தென்பகுதிகளில் இடப்பெயர்வினை மேற்கொண்டு மீன்பிடியினை செய்வதற்கு தென்பகுதி மீனவர்கள் அனுமதி தராத போது வடபகுதி மக்கள் மட்டும் ஏன் இதனை அனுமதிக்க வேண்டும். எமது முன்னோர் செய்த தவறின் விளைவினையே தற்போது அனுபவிக்கின்றோம். தென்பகுதி மீனவர்கள் வர ஆரம்பித்த காலத்திலேயே அவர்கள் எதிர்ப்பினை காட்டியிருந்தால் அவர்களின் வருகையினை அப்போதே கட்டுப்படுத்தியிருக்கலாம். தற்போதய சந்ததியினரை பாதித்துள்ள பிரச்சனையானது அடுத்த சந்ததியினருக்கு தொடராத வண்ணம் தற்போது மன்னாரில் குறிப்பாக பனங்கட்டுகொட்டில் சவுதபார் பகுதியில் அவர்களின் வருகைக்கு எதிராக போராட்டங்கள் பெருமளவு இடம்பெற்று வருகின்றது. அதே போலவே சிலாபத்துறை தலைமன்னார் பகுதிகளிலும் எதிர்ப்புக்கள் தொடர்ந்த வண்ணம் உள்ளது.

எனவே இந்த பிரச்சனை எதிர்காலத்தில் மற்றுமோறு இனக்கலவரத்தினை தோற்றுவிக்கும் அபாயம் உள்ளதால் இதனை தற்போதே தடுக்கவேண்டியது அரசின் தற்போதய தலையாய கடமையாகவும் உள்ளது. அத்துடன் இரு தரப்பினருக்கும் பாதிப்பு ஏற்படுத்தாது பிரச்சனையினைக்கான தீர்வினை எடுக்கவேண்டியது முக்கியமானதாகவும் உள்ளது. இந்திய மீனவர்கள் பிரச்சனைக்கு கொடுக்கும் அதேயளவு முக்கயத்துவத்தினை இந்த பிரச்சனைக்கும் கொடுத்து வடபகுதி மீனவர்கள் குறிப்பாக மன்னார் மீனவர்களின் வாழ்வாதாரத்தினை பாதிக்கின்ற இந்த தென்மீனவர்கள் பிரச்சனையினை தீர்க்கும் போது மன்னார் மீன் உற்பத்தியில் சிறப்பான இடத்தினை எய்தும் போது மக்களின் வாழ்கைத்தரம் உயர்வடையும் அதேவேளை நாட்டின் அபிவிருத்திக்கும் அது பங்களிப்பு செய்யும் என்பதில் சந்தேகம் இல்லை.