செய்திகள்

உள்ளூராட்சி சபை தேர்தலுக்கு முன்னர் பொதுத்தேர்தல் நடைபெறும்

அனைத்து உள்ளூராட்சி சபைகளுக்கான தேர்தல்களை நடாத்த  முன்னர் பொதுத்தேர்தல் நடைபெறும் என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

இன்று காலி பகுதியில் நடந்த மக்கள் சநதிப்பொன்றில் அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அதேவேளை அனைத்து உள்ளூராட்சி சபைகளும் மே 15 ஆம் திகதிக்கு முன்னர் விசேட ஆணையாளர் ஒருவரின் மேற்பார்வையின் கீழ் கொண்டுவரப்படுமெனவும்  ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.