செய்திகள்

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான வாக்குச் சீட்டுகள் அச்சிடும் பணிகள் ஆரம்பம்

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்களிப்பு எதிர்வரும் 22, 23 மற்றும் 24ஆம் திகதிகளில் இடம்பெறவுள்ளது.இந்நிலையில் உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான வாக்குச் சீட்டுகளை அச்சிடும் பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக அரச அச்சக அலுவலகம் தெரிவித்துள்ளது.

மேலும், அந்தந்த உள்ளூராட்சி மன்றங்களுக்கு போட்டியிடும் கட்சிகள் மற்றும் சுயேச்சைக் குழுக்களின் பட்டியல்கள் அனைத்தும் தற்போது கிடைத்துள்ளதாகவும் அரசாங்க அச்சகம் குறிப்பிட்டுள்ளது.இதற்கமைய சுமார் 70 ஆயிரம் வாக்குச் சீட்டுகள் அச்சிடப்படும் என எதிர்பார்க்கப்படுவதாக உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.339 உள்ளூராட்சி மன்றங்களுக்கான தேர்தல் மார்ச் மாதம் 9ஆம் திகதி நடைபெறவுள்ளது.(15)