செய்திகள்

உழவர் பெருமையினை உலகிற்கு உணர்த்தும் தமிழர் திருநாளாம் தைத்திருநாள்!

தமிழர் திருநாள், தைப் பொங்கல், அறுவடைத் திருநாள் என்றெல்லாம் கூறப்படும் பொங்கல் பண்டிகை, தமிழர் பண்டிகை ஆகும். பொங்கல் என்பதற்கு சாப்பிடும் பொங்கல் என்று பொருள் அல்ல. பொங்கிப் பெருகி வருவது என்று பொருள். தமிழர்கள் இருக்குமிடமெல்லாம் பொங்கல் கொண்டாடப்படுகிறது. இலங்கை மற்றும் இந்தியாவில் வெகு விமரிசையாக கொண்டாடப்படும் பொங்கல் பண்டிகை, மலேசியா, கனடா, சிங்கப்பூர், இலங்கை, மொரீஷியஸ் உள்ளிட்ட அனைத்து உலக நாடுகளிலும் கூட விமரிசையாக கொண்டாடப்படுவது வழக்கம். மலேசியா மற்றும் இலங்கையில் பொங்கல் பண்டிகையன்று பொதுவிடுமுறையாக அறிவிக்கப்படுகிறது.

தோற்றம்

பொங்கல் பண்டிகையின் தோற்றம் எப்போது என்று உறுதியாகத் தெரியவில்லை. 1000 ஆண்டுகளுக்கு முன்பு வந்தது இந்த பண்டிகை என்று சிலர் கூறுகிறார்கள. 2000 ஆண்டுகளுக்கு முன்பிருந்தே இது கொண்டாடப்படுகிறது என்பது சிலரது வாதம். சோழர் காலத்தில் பொங்கல் பண்டிகைக்கு புதியீடு என்று பெயர் இருந்தது. அதாவது, ஆண்டின் முதல் அறுவடை என்று அதற்குப் பொருள். உழவர்கள் thai_pongalதை மாதத்தின் முதல் நாளில், அந்த ஆண்டின் முதல் அறுவடையை மேற்கொள்வது வழக்கமாக இருந்தது. இதுதான் பின்னர் பொங்கல் பண்டிகையாக மாறியது என்கிறார்கள். ஆரம்பகாலங்களில் பொங்கல் நான்கு நாட்களாகக் கொண்டாடப்பட்டது. போகிப்பொங்கல், தைப்பொங்கல், மாட்டுப்பொங்கல்,காணும்பொங்கல் ஆகியனவாகும்.

முதலாம் நாள்: போகிப்பொங்கல்

அறுவடைசெய்தபின் சூடுமித்தித்து தூற்றியபின் எஞ்சிய உமிபோன்ற கழிவுகளைக் கொளுத்தினார்கள்சூழல்மாசடையாமல் இருப்பதற்காகவே அவ்ர்கள் அவற்றைக் கொளுத்தினார்கள். இந்நிகழ்ச்சியே நாளடைவில் பழைய பொருட்களைக்கொளுத்தும் நிகழ்வாக நடைபெற்றது. பழைய குப்பைகளை கொளுத்தும் போது தங்கள் மனங்களில் உள்ள தீய எண்ணங்களும் கசப்பான நினைவுகளும் எண்ணங்களூம் அகற்றப் பட்டு மனம் இலேசாகி புதிய நல்ல எண்ணங்கள் உண்டாகும். தைத்திங்கள் முதற்கொண்டு நடப்பவை யாவும் நல்லவையாக நடக்கட்டும் என்பதே. தமிழர் மட்டுமல்ல இன்று வேற்று நாட்டவர்களும் தமிழரைப்போலவே தைப்பொங்கலைக் கொண்டாடுகிறார்கள். இது போக்கிப் பொங்கல் என்றே கூறப்பட்டது. பின்னர் போகிப்பொங்கல் என வழங்கலாயிற்று.

இரண்டாம் நாள்: தைப்பொங்கல்

நாகரிக வளர்ச்சியடைந்த மனிதன் சூரிய,சந்திரர்களை அடிப்படையாகக் கொண்டு தனது வாழ்வியலையும், அறிவியலையும் அமைத்துக் கொண்டான். அவ்வாறு ஞாயிறை அடிப்படையாகக் கொண்டு பகுக்கப்பட்ட இயற்கையின் இயக்கத்திலே ஆண்டின் தொடக்கமே தைமாதம் எனப் பகுத்தான்.எனவே மாறிவரும் ஆண்டின் தொடக்க நாளான தைமுதல்த் தேதியே தமிழர் புத்தாண்டு தினம் என்றும் தைப்பொங்கல் தினம் என்றும் கொண்டாடத் தொடங்கினான்.

தமிழன் தனது வாழ்வியலில் நுண்ணறிவுடன் செயல்படுபவன். ஒவ்வொரு செயலுக்கும் முக்கிய காரணத்தைக் கண்டுசெயல்பட்டான்.தைப்பொங்கல் திருநாளில் அதிகாலையில் எழுந்து வீட்டுமுற்றத்தில் பொங்கலுக்கான முன்னேற்பாடுகளைச் செய்து புதுப் பானையில் பொங்குவர்.மாவிலைத் தோரணம் கட்டி பொங்கல் பானையில் இஞ்சி, மஞ்சளிலை, கரும்பு என்பனவற்றைக் கட்டிப்பொங்குவர். மஞ்சள் தமிழர் வாழ்வில் மிக உன்னதமான இடத்தைப் பெற்றுள்ள பொருள் ஆகும்.மஞ்சளை மகலக்ஷிமியாகவே கருதினார்கள்.மங்கலகரமான நிகழ்வுகள் அனைத்திலும் இன்றியமையாத இப்பொருள்என்றும் எம்மக்கள் காலம் முழுவதும் மங்கலமாக வாழ வேண்டும் என்பதைக் குறிக்கிறது.மாவிலை இலகுவில் அழுகாது காய்ந்து சருகாகும் ஒரு பொருள்.அதுபோல் மனிதனும் தன்வாழ்வில் நன்றாக வாழ்ந்து முதுமையை அடைய வேண்டும் என்பதே.கரும்பின் நுனிப்பகுதி உப்புச் சுவையுடையது.அடிப்பகுதி இனிப்புச் சுவையுடையது.இளமையில் நுனிக்கரும்பு உவர்ப்பது போல் கஷ்டப்பட்டு உழைத்தால் முதுமையில் அடிக்கரும்பு இனிப்பது போல் மகிழ்வாக வாழலாம். இத்தத்துவங்களைத்தான் தைப்பொங்கல் தினத்தில் தமிழர் கடைப்பிடிக்கின்றனர்.

மூன்றாம்நாள்: மாட்டுப்பொங்கல்

மாட்டுப்பொங்கல் உழவுக்கு உதவிசெய்த மாடுகளுக்கு நன்றி செலுத்தும் திருநாளாகவே மாடுகளுக்கு அலங்காரம் செய்து குளிப்பட்டி பொங்கி பூஜித்து வழிபடப்படுகிறது. உலகிலே ஒரேஒரு இனம்தான் தங்களுக்கு உதவி செய்யும் மிருகங்களுக்கு நன்றி செலுத்தி மிருகங்களுக்கு என ஒரு கொண்டாட்டம் கொண்டாடும் இனம் அது தமிழ் இனம்தான்ஆதிமனிதன். மாடுகளைப் பயன்படுத்தி வயலை உழுதான் உழவுத் தொழிலுக்கு மட்டுமன்றி நெற்சூட்டை சூடுமிதிக்கவும் மாடுகள் உதவின பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்னரே மக்கள் போக்குவரத்திற்கு.மாடுகளைப் பயன் படுத்தினர்.

Maattuppongalபோக்குவரத்திற்கான வண்டிகள், வணிகத்திற்கான பொருட்களை ஏற்றிச் செல்லும் பொதி வண்டிகள் அனைத்தையும் மாடுகளே இழுத்துச் சென்றன.மாட்டிலிலிருந்து பாலைப் பெற்றவன் பின் அதிலிருந்து தயிர், மோர், வெண்ணெய், நெய் என்பனவற்றைப் பெற்றான்.சாணத்தைப் பசளையாகப் பயன் படுத்தினான்.எனவே உழவுத்தொழிலுக்கு மட்டுமன்றி மனிதனின்வாழ்வோடு ஒன்றிணைந்த மாடுகளுக்கு நன்றி செலுத்தவும் தமிழன் பொங்கலுக்கு மறு நாள் மாட்டுப் பொங்கல் கொண்டாடுகின்றான்.உலகிலே அக்கினியையும், சூரியனையும் வழிபடும் ஒரே இனம் தமிழினம் ஒன்றேதான். எனவே தைப்பொங்கல்த் திருநாள் தமிழர் திருநாள் என்று சொல்வதில் நாம் பெருமைப் படுகிறோம்.அதுமட்டுமல்ல ஆதிகாலத்திலிருந்தே தைப்பொங்கல் கொண்டாடப் பட்டு வந்துள்ளதால் தமிழினம் மிகவும் தொன்மையானது என்பதில் எந்த ஐயமும் இல்லை. தமிழரின் தாய் மொழி தமிழ். எனவே தமிழ் மிகவும் தொன்மையானது என்பதிலும் எந்த ஐயமும் இல்லை. எனவே தைப் பொங்கல் சமய சார்பற்ற எல்லாருக்கும் பொதுவான தமிழர் திருநாள்.

நான்காம் நாள்: காணும் பொங்கல்

இன்று உற்றார் உறவினர்கள் வீடுகளுக்குச் சென்று பரிசுப் பொருட்கள் வழங்கி அன்பைப் பகிர்ந்து கொண்டாடப்படும்.இந்நாளில் ஜல்லிக்கட்டு என்னும் காளைகளை அடக்கும் விளையாட்டு நடைபெறும்.மூர்க்கமாக மோதும் காளைகளை வீரம் மிக்க இளஞர்கள் அடக்குவார்கள் வெற்றிபெற்றவனைஎல்லோரும் பாராட்டி பரிசுகள் வழங்கப்படும்ஸ்பெயின், போர்த்துக்கல் போன்ற நாடுகளிலும் காளைகளை அடக்கும் விழா கொண்டாடப்படுகின்றது. ஆனால் அது காளைகளைக் காயப்படுத்தி கொண்டாடப்படுகிறது. ஆனாஅல் தமிழர் வீரத்தையும், பண்பாட்டையும் வெளிக்கொணரக் கொண்டாடுகின்றார்கள்.இன்று போகிப்பொங்கல், காணும்பொங்கல் என்பன வழக்கொழிந்து போயுள்ளன.

thai

தமிழர் மட்டுமல்ல இன்று வேற்று நாட்டவர்களும் தமிழரைப்போலவே தைப்பொங்கலைக் கொண்டாடுகிறார்கள்ஜப்பான்,தாய்லாந்து இந்தியா மொரீஷியஸ் போன்றநாட்டு மக்களும் தைப்பொங்கலைக் கொண்டாடுகின்றார்கள்.ஜப்பானியர்களும் தை 14ம் திகதி அன்றுபழைய பயன்பாட்டுப்பொருட்களை எரிப்பார்கள்.தமிழர்களும் அவ்வாறே செய்கின்றார்கள்.தை 15ஆம் நாள் ஜப்பானியர்களும் தமிழர்கள் போல் தோரணங்களைத் தொங்கவிட்டு புதுநீர் அள்ளி பருப்புச் சேர்த்து சமைத்தபொங்கலைப் பரிமாறுகிறார்கள்..தமிழர்கள்பொங்கல் பானையில் பொங்கும்போது “பொங்கலோ பொங்கல்”என்று மகிழ்ச்சி ஆரவாரம் செய்கின்றார்கள்.அதேபோல் ஜப்பானியர்கள் தமது புத்தாண்டான தை 15ம் நாளில் FONKARA-FONKARA என்று மகிழ்ச்சி ஆரவாரம் செய்கின்றார்கள்.தை 16ம் நாள் பணியாளர்களுக்கு புத்தாடை வழ்ங்கல், முன்னோர்க்குப் படையல் செய்தல் போன்றகாரியங்களைச் செய்கின்றார்கள்.பருப்புத் தவிடு பொங்க பொங்க, அரிசித்தவிடு பொங்க பொங்க என்ற கருத்துப் படப் பாடப்படும் யப்பானிய வாய் மொழிப்பாடலில் “பொங்க- பொங்க “என்ற சொற்களுக்கு யப்பானிய மொழியில் HONGA-HONGA என்றே பாடுகின்றார்கள்.

பொங்கலுக்கு மறுநாள் நாம் மாட்டுப்பொங்கல் கொண்டாடுவதுபோல, ஜப்பானில் குதிரைப் பொங்கல் கொண்டாடுவார்கள். அன்று குதிரைகளை நன்கு தேய்த்துவிட்டு அலங்காரம் செய்து, மலர் மாலைகள் சூட்டி, குதிரைகளுக்கு இனிப்புக் கொடுப்பது வழக்கம். மியான்மரில் (பர்மா) பொங்கல் திருநாள் அன்று புத்தாடை அணிந்து சூரிய வழிபாடு செய்வதுடன், கால்நடைகளுக்குப் பூஜை செய்து போற்று கின்றனர்.

அமெரிக்காக் கண்டத்தில் வாழும் செவ்விந்தியர்கள் அறுவடை செய்த சோளத்தைக் கடவுளுக்குப் படைக்கும் பண்டிகை ஒன்றைக் கொண்டாடுகின்றார்கள். யேர்மனியிலும் அறுவடைத்திருநாள் ஐப்பசி மாதத்தில் கொண்டாடப்பட்டு வருகின்றது. தம் காணிகளில் விளைந்த காய்கறிவகைகள்,கிழ்ங்குவகைகள்,கனிகள் யாவற்றையும் தேவாலயத்தில் பூசைக்கு வைத்து இயற்கைக்கு நன்றிசெலுத்தும் நாளாகக் கொண்டாடுகின்றார்கள் எகிப்தில் சூரியக்கோவில்கள் இருந்துள்ளன. அங்கே சூரிய வழிபாடு நடைபெற்றுள்ளன என்பதுதெளிவாகின்றது. பலநாடுகளில் சூரியவழிபாடு நடைபெற்றுள்ளன என்பது ஆய்வுகள் மூலம் கண்டறியப்பட்டுள்ளது.  இன்றைய ஆய்வுகள் யாவும் தமிழரைப் பின் பற்றியே மற்றையோரும் தைப்பொங்கலைக் கொண்டாடினார்களென்பது அறியப்பட்டுள்ளது.

ஒருநாட்டின் முதுகெலும்பெனத் திகழும் உழவனும், ஒருநாட்டின் பொருளாதாரத்தின் முக்கிய ஊன்றுகோலாக விளங்கும் உழவுத்தொழிலையும் போற்றி. உழைப்பையும்,இயற்கையையும் வழிபடும் ஒரு சமய சார்பற்ற உலகின் பல்லினப்பண்பாட்டு விழாக்களிலே மிகமேன்மையான, உயர்ந்த கோட்பாடுகளைக் கொண்ட நாகரிகமுதிர்வில் விளைந்த திருநாளான தைப்பொங்கல் பண்டிகையை நாம் அனைவரும் கொண்டாடி இன்புறுவோம்.

 பவானி சிறிகாந்தா