செய்திகள்

ஊடகங்கள் மீதான கண்காணிப்பு தொடர்கிறது: சர்வதேச ஊடகக் கூட்டமைப்புக்கு முறைப்பாடு

2000ஆம் ஆண்டின் பின்னர் கொலை செய்­யப்­பட்டும் காணா­மல்­போ­யுமுள்ள வடக்கு ஊட­வி­ய­லா­ளர்கள் தொடர்பில் சர்­வ­தேச ஊடக அமைப்­புக்­க­ளது கண்­காணிப்பின் கீழான திறந்த விசா­ரணை அவ­சியம் என்ற யாழ்.ஊடக அமை­யத்தின் கோரிக்­கை­யினை சர்­வ­தேச மட்­டத்­தில் எடுத்து செல்­ல­வுள்ளோம் என சர்­வ­தேச ஊடக கூட்­ட­மைப்பு தெரி­வித்­துள்­ளது.

அத்­துடன் வடக்கில் ஊட­க­வி­ய­லா­ளர்கள் மற்றும் ஊடக அமைப்­புக்கள் மீதான கடு­மை­யான கண்­கா­ணிப்பு நிறுத்­தப்­பட வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்­துள்­ளது.

சர்வதேச ஊடகக் கூட்டமைப்பின் சார்பில் அவுஸ்­தி­ரே­லி­யாவின் கிரிஸ்­தோமர் வாரென் ,அமெ­ரிக்­காவை சேர்ந்த ஸ்கெற்­சி­றிமென் மற்றும் இந்­தி­யாவின் சித்தார்த் வர­த­ராஜன் ஆகியோர் வடக்­கிற்கு விஜயம் செய்­தி­ருந்­தனர். தமது இரண்டு நாள் விஜயத்தின் நிறை­வாக நேற்று முன்­தினம் யாழ் ஊடக அமை­யத்தில் நடை­பெற்ற ஊட­க­வி­யலாளர் சந்­திப்பின் போது கருத்து வெளியி­டு­கை­யி­லேயே மேற்­கண்­ட­வாறு தெரி­வித்­தனர்.

ஜன­வரி 8 க்குப் பின்­னான காலப்­ப­கு­தியில் வெளிப்­ப­டை­யான வன்­மு­றைகள் இல்­லை­யென சகல பத்­தி­ரி­கை­யா­ளர்­களும் ஏற்­றுக்­கொண்­டுள்­ளனர். பய­மு­றுத்­தலும் எண்­ணிக்­கையில் வீழ்ச்சி கண்­டுள்­ளது. எவ்­வா­றா­யினும் பத்­தி­ரி­கைத்­து­றைக்­கான சவால்கள் தற்­போதும் காணப்­ப­டு­கின்­றன.

நாட்டின் எதிர்­காலம் குறித்து தளம்பல் நிலைப்­பாடு ஏற்­ப­டுத்தும் சுய தணிக்­கையும் ­ பத்­தி­ரி­கை­யாளர் மீதான தொடர் கடும் கண்­கா­ணிப்பும் நிறுத்­தப்­ப­ட­வேண்டும்.

வடக்கில் 2000ஆம் ஆண்­டி­லி­ருந்து 12 ஊட­க­வி­ய­லா­ளர்கள் கொல்­லப்­பட்­டுள்­ளனர். 4 பேர் காணா­மற்­போ­யுள்­ளனர். இவர்கள் கொல்­லப்­பட்­ட­தாகக் கரு­தப்­ப­டு­கின்­றனர். எனினும் ஒருவர் மீது கூட இதற்­கான பொறுப்பு கூறப்­ப­ட­வில்லை சீர்­தி­ருத்த நடை­மு­றையின் பகு­தி­யாக திறந்த விசா­ர­ணைகள் நடத்­தப்­ப­ட­வேண்­டி­யது அவ­சி­ய­மாகும்.அதிலும் சர்­வ­தேச ஊடக அமைப்­புக்­க­ளது கண்­கா­ணிப்பின் கீழான திறந்த விசா­ரணை எனும் யாழ்.ஊடக அமை­யத்தின் கோரிக்­கை­யினை சர்­வ­தேச மட்­டத்­தில் எடுத்து செல்­ல­வுள்ளோம். பாது­காப்­பான பணிச்­சூழலை ஏற்­ப­டுத்­து­வதில் ஏற்­கக்­கூ­டிய வகி­பங்­கினை பத்­தி­ரிகை அமைப்­புக்கள் இனங்­கா­ண­வேண்டும்.

வடக்கில் தொழில் முறைப் பத்­தி­ரிகைத் தொழில், கட்­டுப்­பா­டற்ற ஊட­கத்தின் பெறு­மதி என்­ப­வற்றை ஆவன செய்­யும் ­வகையில் பயிற்­சியை அளிக்கச் சகல ஊடக அமைப்­புக்­களும் ஒன்­றி­ணை­ய­வேண்டும்.

சர்வதேச ஊடக அமைப்புக்களின் பிரதிநிதிகள் வடக்கிற்கான விஜயத்தை மேற்கொண்டு பத்திரிகை நிறுவனங்கள் வன்னி, யாழ் ஊடகவியலாளர்கள் ஊடக அமைப்புக்கள் சந்தித்து வடக்கின் நிலைமைகளை ஆராய்ந்துள்ள­தோடு, வடக்கு முதலமைச்சர் ஆளுநர் ஆகியோரையும் சந்தித்து கலந்துரை யாடியிருந்தமை குறிப்பிடத்தக்கது.