செய்திகள்

ஊடகத்துறை அமைச்சுக்கு புதிய செயலாளர்

ஊடகத்துறை மற்றும் பாராளுமன்ற விவகாரங்கள் அமைச்சின் புதிய செயலாளராக நிமல் போபகே நியமிக்கப்பட்டுள்ளார்.
இவர் நாளை மறுதினம் திங்கட் கிழமை கடமைகளை பொறுப்பேற்பார் என ஊடகத்துறை அமைச்சு தெரிவித்துள்ளது.
இதற்கு முதல் அந்த அமைச்சின் செயலாளராக வஜிர நாரம்பணாவ  பணியாற்றிய நிலையில் அவர் தேசிய நல்லிணக்கம் , கலந்துரையாடல்கள் மற்றும் அரச மொழிகள் அமைச்சின் செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

 n10