செய்திகள்

ஊடகவியலாளர்களுக்கு சலுகை விலையில் மோட்டார் சைக்கிள்களுக்கான விண்ணப்பம் இவ்வார இறுதியிலிருந்து

ஊடகவியலாளர்களுக்கு சலுகை  விலை அடிப்படையில் மோட்டார் சைக்கிள்களை வழங்குவதற்கான விண்ணப்பங்கள் இவ்வார இறுதியில் தேசிய பத்திரிகைகளில் பிரசுரிக்கப்படும் என ஊடகத்துறை அமைச்சின் செயலாளர் கருணாரத்ன பரணவித்தாரன தெரிவித்துள்ளார்.
அரசாங்க தகவல் திணைக்களத்தில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவித்தபோதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.
ஊடகவியலாளர்களுக்கு சலுகை அடிப்படையில் மோட்டார் சைக்கிள்களை வழங்குவதற்கான விண்ணப்பங்கள் இவ்வாற இறுதியிலிருந்து கோரப்படவுள்ளது. இதன்படி விண்ணப்பதாரி இலங்கை பிரஜையாக இருத்தல் வேண்டும் என்பதுடன் அவர் ஊடக துறையில் 5 வருட அனுபவத்தினையும் கொண்டிருக்க வேண்டும்.
அத்துடன் அரசாங்க தகவல் திணைக்களத்தினால் வழங்கப்படும் ஊடகவியலாளர்களுக்கான அடையாள அட்டை வைத்திருத்தல் வேண்டும் இதேவேளை சுதந்திர ஊடகவியலாளர்களும் இதற்காக விண்ணப்பிக்கலாம் என அவர் தெரிவித்துள்ளார்.