செய்திகள்

ஊடகவியலாளர்களை பாதுகாப்பதற்கு தவறிய மோசமான நாடுகளில் இலங்கையும் ஒன்று

2014- 2015 காலப்பகுதியில் ஊடகவியலாளர்களை பாதுகாப்பதில் தவறிய மோசமான நாடுகளில் இந்தியா, பாகிஸ்தான் மற்றும் அப்கானிஸ்தான் ஆகிய நாடுகளுடன் இலங்கையும் ஒன்று என்று சர்வதேச ஊடகவியலாளர்கள் அமைப்பு தெரிவித்திருக்கிறது.

ஊடகவியலாளர்களை தாக்குதல், கடத்துதல் மற்றும் கொலை செய்தல் ஆகியவற்றில் ஈடுபடுபவர்களை நீதிக்கு முன் கொண்டு வருவதற்கு தவறுவதை முடிவுக்கு கொண்டு வருவதற்கான பிரசாரம் அவசியமாக தேவைப்படுகிறது என்றும் அந்த அமைப்பு தனது 13 ஆவது வருடாந்த அறிக்கையில் தெரிவித்துள்ளது.