செய்திகள்

ஊடகவியாளர்களை அச்சுறுத்திய தம்மிக்க ரணதுங்க கடுமையாக எச்சரிக்கப்பட்டு பிணையில் விடுதலை

கொழும்பு மேல் நீதிமன்ற வளாகத்திற்குள் ஊடகவியலாளர்களை அச்சுறுத்திய சம்பவம்  தொடர்பாக இன்று நீதிமன்றத்தில் ஆஜராகிய துறைமுக அதிகார சபையின் தலைவர் தம்மிக்க ரணதுங்க  கடுமையாக எச்சரிக்கப்பட்டு பிணையில் விடுதலை செய்யபட்டுள்ளார்.
கடந்த வாரம் நீதிமன்ற வளாகத்தில் வைத்து அங்கு கடமையில் ஈடுபட்டிருந்த ஊடகவியலாளர்களை தம்மிக்க ரணதுங்க அச்சுறுத்தி அவர்களின் கடமைகளுக்கு இடையூறுகளை ஏற்படுத்தியிருந்த நிலையில் இது தொடர்பாக ஊடகவியலாளர்களினால் வாழைத்தோட்டம் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டிருந்தது.
இதனை தொடர்ந்து அது தொடர்பாக பொலிஸார் நீதிமன்றத்தில் தொடர்ந்த வழக்கையடுத்து நீதிமன்றம் அவரை நீதிமன்றத்தில் ஆஜராகுமாறு அழைப்பு விடுத்திருந்தது.
இதன்படி அவர் இன்று நீதிமன்றத்தில் ஆஜரான போது நீதிமன்ற வளாகத்திலேயே இவ்வாறு நடந்துக்கொள்ளுகின்றீர்கள் என்றால் நீங்கள் பணிபுரியும் துறைமுக அதிகார சபையில் எவ்வாறு நடந்துக்கொள்ளுவீர்கள் என சந்தேகிக்க வேண்டியுள்ளது. உங்களின் அண்ணனின் கௌரவத்தை பாதுகாத்துக்கொள்ளுங்கள் என நீதவானினால் கடுமையாக எச்சரிக்கப்பட்டு ஒரு இலட்சம் ரூபா சரீரப்பிணைகள் இரண்டின் கீழ் விடுதலை செய்யப்பட்டுள்ளார்.
இவர் அமைச்சர் அர்ஜுன ரணதுங்கவின் சகோதரர் என்பது குறிப்பிடத்தக்கது.
n10