செய்திகள்

ஊரடங்குச் சட்டம் தளர்த்தப்பட்ட நேரத்தில் பல நகரப் பகுதிகளில் மக்கள் நடமாட்டம் குறைவு

இன்று ஊரடங்குச் சட்டம் தளர்த்தப்பட்ட நேரத்தில் வடக்கு, கிழக்கு மலையகம் உள்ளிட்ட பல நகரப் பகுதிகளில் மக்கள் நடமாட்டம் குறைவாகவே காணப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.இந்நிலையில் கிளிநொச்சி முக்கிய இடமான சந்தை பகுதியில் மக்கள் நடமாட்டம் குறைவாக இருந்ததை அவதானிக்க முடிந்தது.வவுனியாவில் ஊரடங்கு சட்டம் தளர்த்தப்பட்டதையடுத்து பொதுமக்கள் பொருட்களைக் கொள்வனவு செய்வதிருந்தனர்.காமினி மகாவித்தியாலய வீதி, ஹொரவப்பொத்தானை வீதி போன்ற பகுதிகளில் நேரடியாக விவசாயிகள் மரக்கறி வியாபாரங்களை மேற்கொள்வதற்கு ஒழுங்குபடுத்தப்பட்ட நிலையில் அங்கு பொதுமக்கள் அதிகளவில் சென்றிருந்தனர். இதனால் வவுனியா நகருக்கு வருவது வெகுவாகக் குறைந்திருந்தது.

இன்று ஊரடங்குச் சட்டம் தளர்த்தப்பட்ட போது மன்னார் தினச் சந்தை மரக்கறி வியாபார நிலையப் பகுதி வெறிச்சோடிக் காணப்பட்டதுடன் அரச, தனியார் போக்குவரத்துச் சேவைகள் உள்ளூர் மட்டத்தில் இடம்பெற்றபோதும், குறித்த சேவைகள் திடீரென இரத்துச் செய்யப்பட்டதால் மக்கள் அசௌகரியங்களுக்கு முகம் கொடுத்திருந்தனர்.அத்துடன் மன்னார் நகரிலும் மக்களின் நடமாட்டம் குறைவாகக் காணப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.

இதேவேளை மலையக பகுதியில் இதற்கு முன்னர் ஊரடங்கு தளர்த்தப்பட்ட சந்தர்ப்பத்தில் அத்தியாவசியப் பொருட்களைக் கொள்வனவு செய்வதற்காக நீண்ட வரிசையில் காத்திருப்பார்கள். ஆனால் இன்று வழமையைவிடவும் மக்கள் நடமாட்டம் 50 வீதமாக குறைந்திருந்ததை அவதானிக்க முடிந்தது.மேலும் மலையகத்தில் பெருந்தோட்டப் பகுதியை அண்டியுள்ள நகரங்களுக்கு வழமையை விடவும் குறைந்தளவான மக்களே வருகைத்தந்திருந்தனர்.இதேவேளை, மட்டக்களப்பு மாவட்டத்திலும் குறைந்தளவு மக்களே வர்த்தக நிலையங்களுக்கு வருகைதந்து பொருட்கொள்வனவில் ஈடுபட்டுள்ளதை காணமுடிந்தது.குறிப்பாக மட்டக்களப்பில் அத்தியாவசிய பொருட்கள் விற்பனை செய்யும் வர்த்தக நிலையங்கள், மருந்தகங்கள் மட்டுமே திறந்திருந்ததைக் காணமுடிந்தது.(15)
Curfew-Released-Time-Kilnichchi-Situation-Coronavirus-Alert-Situation-01-04-2020-2 Curfew-Released-Time-Kilnichchi-Situation-Coronavirus-Alert-Situation-01-04-2020-4 Curfew-Released-Time-Kilnichchi-Situation-Coronavirus-Alert-Situation-01-04-2020-5 Curfew-Released-Time-Mannar-Situation-Coronavirus-Alert-Situation-01-04-2020-2Curfew-Released-Time-Mannar-Situation-Coronavirus-Alert-Situation-01-04-2020-5 Curfew-Released-Time-Upcountry-Situation-Coronavirus-Alert-Situation-01-04-2020-4