செய்திகள்

ஊரடங்குச் சட்டம் தொடர்ந்தும் நீடிப்பு -வெளியானது விசேட அறிவிப்பு

யாழ்ப்பாணம்,கொழும்பு,கம்பஹா,களுத்துறை,கண்டி,புத்தளம் போன்ற மாவட்டங்கள் தவிர்ந்த ஏனைய 19 மாவட்டங்களுக்கும் வருகின்ற ஏப்ரல் 16 ஆம் திகதி காலை 6 மணிக்கு ஊரடங்கு தளர்த்தப்பட்டு மீண்டும் அன்றைய தினம் மாலை 4 மணிக்கு மீளவும் அமுலுக்கு வரும் என அரசாங்கம் அறிவித்துள்ளது.ஏப்ரல் 14 அன்று குறித்த 19 மாவட்டங்களுக்கும் ஊரடங்கு தளர்த்தப்படும் என்று அறிவிக்கப்பட்டிருந்த நிலையிலேயே தற்போது திகதி நீடிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.இதேவேளை அத்தியாவசியத் தேவைகளைத் தவிர்த்து ஏனைய தேவைகளுக்காக மாவட்டத்தை விட்டு வெளியேறுவது முற்றிலுமாக தடை செய்யப்பட்டுள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு மேலும் தெரிவித்துள்ளது.(15)