செய்திகள்

ஊரடங்கு சட்டம் எப்போது நீங்கும்? பொலிஸாரின் பதில்

ஊரடங்கு சட்டம் எப்போது நீக்கப்படும் என்பது மக்களின் நடவடிக்கைகளின் மூலமே தீர்மானமாகுமென பொலிஸ் சட்ட பிரிவுக்கு பொறுப்பான பிரதி பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹன தெரிவித்துள்ளார்.
ஊரடங்கு சட்டம் முழுமையாக எப்போது நீக்கப்படுமென பலர் கேள்வியெழுப்பும் நிலையிலேயே அவர் இதனை தெரிவித்துள்ளார்.
இந்த கேள்விகளுக்கு பதிலளிக்கும் அவர் இதற்கான பதில் தங்களிடம் இல்லையெனவும் மக்களிடமே இருப்பதாகவும் மக்கள் நடந்துகொள்ளும் விதத்தை பொறுத்தே அது தொடர்பாக தீர்மானம் எடுக்கப்படுமென அவர் தெரிவித்துள்ளார்.
மக்கள் ஒன்று கூடுவதை தடுக்கும் வகையிலேயே ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ளது. -(3)