செய்திகள்

ஊரடங்கு சட்ட நேரத்தில் உணவு , மருந்து பொருட்கள் தொடர்பான பிரச்சினைகளை இந்த இலக்கங்களுக்கு அறிவியுங்கள்

ஊரடங்கு சட்டம் அமுலில் இருக்கும் நேரத்தில் உணவு மற்றும் மருந்து பொருட்கள் தொடர்பான பிரச்சினைகள் தொடர்பாக முறைப்பாடுகளை முன்வைப்பதற்காக அத்தியாவசிய சேவைகளுக்கான ஜனாதிபதி செயலணி மேலும் சில இலக்கங்களை அறிமுகம் செய்துள்ளது.
இதன்படி 011 345 62 00, 011 345 62 01, 011 345 62 02, 011 345 62 03 மற்றும் 011 345 62 04 என்ற தொலைபேசி இலக்கங்களை தொடர்பு கொண்டு மக்கள் தமது பிரச்சினைகளை முன்வைக்க முடியும். இந்த இலக்கங்களுக்கு கிடைக்கும் முறைப்பாடுகளை அடிப்படையாக கொண்டு பிரச்சினைகளுக்கு தீர்வு காண நடவடிக்கையெடுக்கப்படும். -(3)