செய்திகள்

ஊரடங்கு தளர்த்தப்படும் தருணங்களில் சமூக இடைவெளியினை பின்பற்ற வேண்டியது அவசியம்

ஊரடங்கு தளர்த்தப்பட்ட பிரதேசங்களில் பொதுமக்கள் கொரோனா பரவலைக்கட்டுப்படுத்துவதற்கான உலக சுகாதார நிறுவனத்தினால் வழங்கப்பட்டுள்ள ஒரு மீற்றருக்கும் அதிகமாக இடைவெளியை ஒருவரிடத்திலிருந்து பிறிதொருவர் பேணுவது அவசியமாகின்றது என்று இராணுவத் தளபதி லெப்டினன்ட் ஜெனரல் சவேந்திர சில்வா வலியுறுத்தியுள்ளார்.அத்துடன் எமக்கு வெளிப்படையாக தெரியாது விட்டாலும் சமூகத்தில் பாதிக்கப்பட்ட நபர்கள் அடையாளப்படுத்தப்படாதிருப்பதானது குறிப்பிடத்தக்க அச்சுறுத்தலை ஏற்படுத்துவதாகவே
உள்ளதாகவும் இராணுவத் தளபதி மேலும் குறிப்பிட்டுள்ளார்.

கொரோனா தொற்று பரவலை மையப்படுத்தி, கொழும்பு, கம்பஹா, களுத்துறை, கண்டி, புத்தளம், யாழ்ப்பாணம் ஆகிய 6 மாவட்டங்களில் மட்டும் ஊரடங்கு அறிவிப்பு மறு அறிவித்தல் வரை நீடிக்கப்பட்டுள்ள நிலையில் ஏனைய மாவட்டங்களில் இன்று காலை 6 மணிக்கு ஊரடங்கு சட்டம் தற்காலிகமாக நீக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.இந்நிலையில் ஊரடங்குச் சட்டம் தளர்த்தப்படும் தருணங்களில் அனைவரும் சமூக இடைவெளியினை பின்பற்ற வேண்டியது அவசியம் என கொரோனா வைரஸ் கட்டுப்பாட்டிற்கான தேசியசெயற்பாட்டு மையத்தின் தலைவர் இராணுவத் தளபதி லெப்டினன்ட் ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.(15)