செய்திகள்

ஊரடங்கு நீக்கப்பட்டதும் கிளினிக்குகள் மீள ஆரம்பிக்கும் : குழந்தைகள் கிளினிக் தொடர்பாக விசேட கவனம்

நாட்டில் மாவட்டங்களில் அமுலில் இருக்கும் ஊரடங்கு சட்டம் நீக்கப்பட்ட பின்னர் வைத்தியசாலைகளில் கிளினிக் சிகிச்சைகளை ஆரம்பிப்பதற்கு நடவடிக்கையெடுக்கப்படவுள்ளது.
இது தொடர்பான சுற்றுநிருபம் சுகாதார அமைச்சின் பணிப்பாளரினால் வெளியிடப்பட்டுள்ளது.
வைத்தியசாலைகளில் கிளினிக் நடவடிக்கைகள் ஆரம்பிக்கபப்படும் போது பின்பற்ற வேண்டிய சுகாதார ஆலோசனைகள் தொடர்பாக அதனூடாக குறிப்பிடப்பட்டுள்ளது.
இதன்படி சமூக இடைவெளியை பேணுவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. நெருக்கடிகளை தவிர்க்கும் வகையில் சிகிச்சையளிக்கும் இடங்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும் நடவடிக்கையெடுக்கப்படவுள்ளது.
குறிப்பாக குழந்தைகள் மற்றும் சிறுவர்களுக்கான கிளினிக் ஆரம்பிக்கப்படும் போது சில கட்டுப்பாடுகளை விதிகள் தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்போது முடிந்தளவு குழந்தையுடன் தாயை மாத்திரம் வைத்தியசாலைக்குள் அனுமதிக்க நடவடிக்கையெடுக்கப்படவுள்ளது. அவர்களுடன் வேறு நபர்கள் வரும் போது வைத்தியசாலைகளுக்குள் நெருக்கடிகள் ஏற்படும் என்பதனால் அதனை தடுக்கும் வைகயில் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது. -(3)