செய்திகள்

ஊரடங்கு முடிந்ததும் 300 ரயில் சேவைகள் : 5000 இ.போ.ச பஸ்கள்

ஊரடங்கு சட்டம் தளர்த்தப்பட்ட பின்னர் பொது போக்குவரத்து சேவைகளை நடத்தும் போது பின்பற்ற வேண்டிய விடயங்கள் தொடர்பாக யோசனைகள் முனவைக்கப்பட்டுள்ளன.
இதன்படி அத்தியாவசிய சேவைகள் தவிர்ந்த வேறு நடவடிக்கைக்களுக்கு செல்பவர்களை அனுமதிக்காதிருப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.
அத்துடன் பஸ்கள் , ரயில்களுக்குள் சமூக இடைவெளிகளை பேணக் கூடிய வகையில் குறிப்பிட்ட எண்ணிக்கையான பயணிகளை மாத்திரம் ஏற்றுவதற்கும் நடவடிக்கையெடுக்கப்பட்டுள்ளது. இதன்படி ஒரு ரயில் பெட்டியென்றில் 50 வரையான பயணிகளை ஏற்றுவதற்கும் இதற்காக ரயில் சேவைகளின் எ;ணிக்கையை 300 வரையில் அதிகரிக்கவும் அத்துடன் 5000 இ.போ.ச பஸ்களை சேவைகளில் ஈடுபடுத்தவும் நடவடிக்கையெடுக்கப்படவுள்ளது. -(3)