செய்திகள்

ஊருக்கு செல்ல முடியாது மேல்மாகாணத்திற்குள் சிக்கியுள்ளவர்களுக்கான அறிவித்தல்

நாட்டில் அமுல்படுத்தப்பட்டுள்ள ஊரடங்கு சட்ட நிலைமையால் தமது சொந்த ஊர்களுக்கு செல்ல முடியாது மேல் மாகாணத்திற்குள் சிக்கியுள்ள வெளியிடங்களை சேர்ந்தவர்களுக்கு நிவாரங்களை வழங்குவதற்கு மேல் மாகாண ஆளுநர் நடவடிக்கையெடுத்துள்ளார்.
இதன்படி 011-2092720 என்ற தொலைபேசி இலக்கத்தை தொடர்பு கொண்டு தமது உதவிகளை அவர்கள் பெற்றுக்கொள்ள முடியுமென அறிவிக்கப்பட்டுள்ளது. -(3)