ஊர்காவற்துறையில் ஆடுகள் திருடி யாழ். நகரில் விற்பனை செய்த இளைஞன் கைது
யாழ்.ஊர்காவற்துறைப் பகுதியில் இரண்டு ஆடுகளைத் திருடி யாழ்ப்பாணம் ஐந்து சந்திப் பகுதியில் வைத்து விற்பனை செய்த 27 வயதுடைய இளைஞனொருவர் நேற்று வெள்ளிக்கிழமை (03.04.2015) மதியம் யாழ்.பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளார்.
யாழ்.ஆனைக் கோட்டைப் பிரதேசத்தைச் சேர்ந்த குறித்த நபர் திருடிய ஆடுகளை மலிவான விலையில் விற்பனை செய்தார்.
இவரது நடவடிக்கையில் சந்தேகம் கொண்ட அப்பகுதி இளைஞர்கள் இது தொடர்பில் பொலிஸாருக்கு இரகசியத் தகவல் வழங்கியதன் அடிப்படையிலேயயே சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார். அவரிடமிருந்த இரண்டு ஆடுகளும் பறிமுதல் செய்யப்பட்டன.
கைதான சந்தேகநபரிடம் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.
யாழ்.நகர் நிருபர்-