செய்திகள்

ஊர்காவற்றுறை நீதிமன்றத்தினால் சுவிஸ் குமார் விளக்கமறியலில் வைக்கப்பட்டார்

வித்தியா படுகொலை சம்பவம் தொடர்பில் பொலிஸாரினால் கைது செய்யப்பட்ட சுவிஸ் நாட்டைச் சேர்ந்த சந்தேக நபர் இன்று பொலிசாரினால் ஊர்காவற்றுறை நீதிமன்றத்தில் ஆஜர் செய்யப்பட்டபோது அவரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிபதி லெனின் குமார் உத்தரவிட்டார்.

நேற்றைய தினம் யாழ் நீதிமன்றத்தில் இவர் ஆஜர் செய்யப்படவிருந்தபோதிலும், அங்கு திரண்ட ஆர்ப்பாட்டக்காரர்கள் வன்முறையில் ஈடுபட்டதால் அவர் ஆஜர் செய்யப்படவில்லை. இதனால் , இன்றைய தினம் அவர் ஊர்காவற்றுறை நீதிமன்றத்தில் ஆஜர் செய்யப்பட்டார்.