செய்திகள்

ஊர்காவற்றுறை பொது மீன்சந்தை திறப்பு

ஊர்காவற்றுறையில் புதிதாக நிர்மாணிக்கப்பட்ட பொது மீன்சந்தைக்கான கட்டிடத் தொகுதியினை ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் உத்தியோகபூர்வமாக திறந்து வைத்தார்.

ஊர்காவற்றுறைக்கு இன்றைய தினம் விஜயம் மேற்கொண்ட செயலாளர் நாயகம் அவர்கள் புதிய மீன் சந்தையை திறந்து வைத்தார்.  மக்கள் விடுத்த கோரிக்கைக்கு அமைவாக இப்புதிய மீன் சந்தை நிர்மாணிக்கப்பட்டு திறந்து வைக்கப்பட்டுள்ளது.

ஊர்காவற்றுறை சந்தைக் கட்டிடத் தொகுதியில் மீன்சந்தைக்கான நிரந்தர கட்டிடம் இல்லாத நிலையில் வியாபாரிகளும் மக்களும் பல்வேறுபட்ட இடர்பாடுகளை சந்தித்து வந்தனர்.

இந்நிலையில் மீன்சந்தைக்கான கட்டிடம் செயலாளர் நாயகம் அவர்களது ஆலோசனை மற்றும் வழிகாட்டலுக்கு அமைவாக பிரதேச சபையின் 2.5 மில்லியன் நிதியுதவியுடன் புதிதாக நிர்மாணிக்கப்பட்டு இன்றைய தினம் திறந்து வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
000-1
இதனிடையே வியாபாரத்தில் ஈடுபட்டிருந்த மீன் மற்றும் மரக்கறி வியாபாரிகளுடன் கலந்துரையாடிய செயலாளர் நாயகம் அவர்கள் அவர்களது ஏனைய பிரச்சினைகள் மற்றும் தேவைப்பாடுகள் தொடர்பிலும் கேட்டறிந்து கொண்டனர்.

இதன்போது பாராளுமன்ற உறுப்பினர் சில்வேஸ்திரி அலென்ரின் (உதயன்) பிரதேச செயலர் திருமதி அன்ரன் யோகன் எழிலரசி, ஊர்காவற்றுறை பிரதேச சபை தவிசாளர் ஜெயகாந்தன், உபதவிசாளர் அல்பேட், பிரதேச சபை செயலாளர் சுதர்ஜன், யாழ்.மாநகர முன்னாள் முதல்வர் திருமதி யோகேஸ்வரி பற்குணராசா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.