செய்திகள்

ஊழலில் அதிமுகவுக்கு திமுக தான் மாற்று – வைகோ குற்றச்சாட்டு

ஊழல் செய்வதில் அதிமுகவிற்கு மாற்று திமுகதான் என மதிமுக பொதுச் செயலாளர் வைகோ குற்றம்சாட்டியுள்ளார்.

ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியில் மக்கள் நலக் கூட்டணியின் பொதுக் கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் கலந்துகொண்டு பேசிய மதிமுக பொதுச் செயலாளர் வைகோ, முதலமைச்சர் ஜெயலலிதா ஊழல்களை தட்டிக்கேட்பதில் திமுக தலைவர் கருணாநிதிக்கும், ஸ்டாலினுக்கும் இல்லாத தைரியம் தனக்கு உள்ளதாகக் கூறினார்.

அதிமுகவிற்கு மாற்று திமுக தான் என்ற கருணாநிதி வெளியிட்ட அறிக்கையை சுட்டிக்காட்டிப் பேசிய வைகோ, ஊழல் செய்வதில்தான் அதிமுகவிற்கு மாற்றாக திமுக விளங்கும் என்றார்.

அதிமுகவிற்கு ஆதரவாக அதிமுகவால் உருவாக்கப்பட்ட அணி மக்கள் நலக் கூட்டணி என்ற குற்றச்சாட்டிற்கு இந்திய கம்யூனிஸ்ட் மாநிலச் செயலாளர் முத்தரசன் கடும் கண்டனம் தெரிவித்தார்.

மக்களோடு கூட்டணி வைக்கவேண்டும் என்பதற்காக திமுக, பாஜக அழைப்புகளை நிராகரித்து மக்கள் நலக் கூட்டணியில் விஜயகாந்த் கைகோர்த்திருப்பதாக விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்.திருமாவளவன் கூறினார்.

N5