செய்திகள்

ஊழல் மோசடிகளை தடுக்க அரசியலமைப்பு திருத்தம் வரும்: அத்துரலிய ரத்தின தேரர்

நாட்டில் ஊழல் மோசடிகளை தடுக்கும் வகையில் அரசியலமைப்பு திருத்தமொன்றை மேற்கொள்ளவுள்ள திட்டமிட்டுள்ளதாக ‘பிவித்துறு ஹெடக்’(தூய்மையான நாளை) அமைப்பின் தலைவரும் ஜாதிக ஹெல உறுமய பாராளுமன்ற உறுப்பினருமான அத்துரலிய ரத்தின தேரர் தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் நேற்று மாலை கொழும்பு விகாரமகா தேவி பூங்கா வளாகத்தில் நடத்தப்பட்ட ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் பங்காளிக் கட்சிகளின் கொழும்பு மாவட்ட உறுப்பினர்களுக்கிடையிலான கூட்டத்தில் உiயாற்றுகையிலேயே  அத்துரலிய ரத்தின தேரர் இதனை தெரிவித்துள்ளார்.
நாட்டில் கடந்த காலங்களில் இடம்பெற்ற ஊழல் மோசடிகளுக்கு இன்னும் முறையாக தண்டனை வழங்கவில்லையென மக்கள் தெரிவிக்கின்றனர். அதுஇலகுவான காரியமல்ல. எதிர்காலத்தில் ஊழல் மோசடிகள் நாட்டில் இடம்பெறாத வகையில் அரசியலமைப்பில் திருத்தங்களை மேற்கொள்ள எண்ணியுள்ளோம். அத்துடன் மோசடியில் ஈடுபட்டுள்ளவர்களுக்கு தண்டணை வழங்கும் வகையில் விசேட முறைமையொன்றையும் ஏற்படுத்த திட்டமிட்;டுள்ளோம். என அவர் தெரிவித்துள்ளார்.