செய்திகள்

ஊவா மாகாணசபையின் பதில் முதலமைச்சராக ரவி சமரவீர நியமிக்கப்பட்டுள்ளார்.

ரவி சமரவீர மாகாண பெருந்தெருக்கள் அபிவிருத்தி, வீடமைப்பு, நீர் விநியோகம் மற்றும் கூட்டுறவு அமைச்சராக கடமையாற்றி வருகின்றார்.

முதலமைச்சர் ஹரீன் பெர்னாண்டோ மலேசியாவிற்கு விஜயமொன்றை மேற்கொண்டதனைத் தொடர்ந்து இவ்வாறு ரவி சமரவீர பதில் முதலமைச்சராக பதவிப் பிரமாணம் செய்து கொண்டுள்ளார்.

தனிப்பட்ட தேவைகளுக்காக முதலமைச்சர் ஹரீன் மலேசியா விஜயம் செய்துள்ளார். ஊவா மாகாண ஆளுனர் எம்.பீ. ஜயசிங்க முன்னிலையில் இன்று முற்பகல் ரவி சமரவீர பதில் முதலமைச்சராகப் பதவிப் பிரமாணம் செய்து கொண்டுள்ளார்.

எதிர்வரும் 10ம் திகதி வரையில் சமரவீர பதில் முதலமைச்சராக கடமையாற்றுவார் எனத் தெரிவிக்கப்படுகிறது.

[youtube url=”https://www.youtube.com/watch?v=Wa3sWY9imhA&feature=youtu.be” width=”500″ height=”300″]