செய்திகள்

எகிப்தின் சினாய் பகுதியில் நடந்த தீவிரவாத தாக்குதலில் மூன்று குழந்தைகள் மற்றும் பெண் பலி

ஐ.எஸ். தீவிரவாதிகளுக்கும் – எகிப்து ராணுவத்திற்கும் இடையே நடந்த சண்டையின் போது மூன்று குழந்தைகள் மற்றும் பெண் பலியாகியுள்ளனர்.

வடக்கு சினாய் நகரத்தில் ஷேக் சூவேய் பகுதியில் ஓர் வீட்டின் மேல் ஷெல் ஒன்று விழுந்து வெடித்ததில் இரண்டு குழந்தைகள் மற்றும் ஒரு பெண்ணும் பலியானதாக மருத்துவ அதிகாரிகள் தெரிவித்துள்ளார்கள். ராணுவம் அல்லது தீவிராவாதிகள் இதில் யார் தரப்பில் இருந்து ஷெல் வீசப்பட்டது என்பது இன்னும் உறுதிப்படுத்தப்படவில்லை. இதேபோல் ராணுவம் மற்றும் போலீசை குறிவைத்து சாலை பகுதியில் நடத்தப்பட்ட தாக்குதலில் 5 வயது குழந்தை ஒன்று பலியானது.

கடந்த 2013-ல் எகிப்தில் முன்னாள் அதிபர் முகம்மது மோர்சி பதவியில் இருந்து வெளியேறியதற்கு பிறகு அங்கு போலீஸ் மற்றும் ராணுவ வீரர்களை குறிவைத்து தாக்குதல் நடத்தப்படுவது அதிகரித்துள்ளது. இதுவரை 600-க்கும் மேற்பட்ட பாதுகாப்பு படைவீரர்கள் பலியாகியுள்ளனர்.