செய்திகள்

எகெலியகொடவில் இடம்பெற்ற விபத்தில் நால்வர் உயிரிழப்பு

இரத்தினபுரி- கொழும்பு பிரதான வீதியின் எகெலியகொட பகுதியில் 06.06.2015 அன்று காலை 2.30 மணியளவில் இடம்பெற்ற விபத்தில் நால்வர் உயிரிந்துள்ளனர்.

முச்சக்கரவண்டியொன்று வேகக்கட்டுப்பாட்டை இழந்து மோட்டார் சைக்கிளுடன் மோதுண்டு, அதன்பின் கொழும்பிலிருந்து இரத்தினபுரி நோக்கிச் சென்ற பஸ்ஸுடன் மோதியதாலேயே இவ்விபத்து இடம்பெற்றுள்ளது.

இவ்விபத்தில் 18 வயதான இருவர் மற்றும் 16 வயதான ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளதுடன், 29வயதான ஒருவர் வைத்தியசாலைக்கு கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்துள்ளார்.

இந்த விபத்தில் காயமடைந்த மோட்டார் சைக்கிளில் பயணித்த இருவர் அவிசாவளை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் பஸ்ஸின் சாரதி கைது செய்யப்பட்டுள்ளதாகவும் எகெலியகொட பொலிஸார் தெரிவித்தனர்.

எகெலியகொட பொலிஸார் விபத்து தொடர்பில் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

vlcsnap-2015-06-06-15h27m04s247 vlcsnap-2015-06-06-15h27m14s86 vlcsnap-2015-06-06-15h27m33s26