செய்திகள்

எக்னலிகொட தொடர்பான அரசாங்கத்தின் விசாரணை திருப்திகரமானதாக இல்லை

காணாமல் போன தனது கணவர் தொடர்பான புதிய அரசாங்கத்தின் விசாரணைகள் தொடர்பாக தன்னால் திருப்தியடைய முடியாதென ஊடகவியலாளர் பிரகீத் எக்னலிகொடவின் மனைவி சந்யா எக்னலிகொட தெரிவித்துள்ளார்.
அவர் காணாமல் போனமை தொடர்பாக விசாரணை நடத்தும் பொறுப்பு குற்ற விசாரணை பிரிவுக்கு ஒப்படைக்கப்படுமென அரசாங்கம் தெரிவித்த போதும் அது என்ன நிலைமையில் இருக்கின்றது என்பது தொடர்பான விபரங்கள் எதுவும் தனக்கு அறியத்தரவில்லை எனவும் சந்யா எக்னலிகொட தெரிவித்துள்ளார்.
எவ்வாறாயினும் இந்த வருடத்திற்குள் தனது கணவருக்கு என்ன நடந்தது என்பது தெரிய வந்து விடும் என்ற நம்பிக்கையில் தான் இருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
பீ.பீ.சி செய்தி சேவைக்கு வழங்கிய செவ்வியொன்றிலேயே அவர் இதனை தெரிவித்துள்ளார்.