செய்திகள்

எங்களை அச்சமின்றி விமர்சிக்கலாம்

இலங்கையின் புதிய ஜனாதிபதி முன்னைய அரசாங்கத்தின் காலத்தில் அச்சம் காரணமாக நாட்டை விட்டு வெளியேறிய மாற்றுக்கருத்துடையோர், மற்றும் ஊடகவியலாளர்களை நாடு திரும்புமாறு அழைத்துள்ளார்.
கொழும்பில் இன்று நடைபெற்ற செய்தியாளர் மாநாட்டில் இதனை தெரிவித்த முன்னாள் அமைச்சர் ராஜித சேனரத்தின வெப்தளங்கள்மீதான தணிக்கையை உடனடியாக நீக்குமாறு ஜனாதிபதி உத்தரவிட்டுள்ளார்,இது தவிர தொலைபேசிகளை இடைமறித்து ஓட்டுக்கேட்டல்,ஊடகவியலாளர்கள் மற்றும் அரசியல்வாதிகளை கண்காணித்தல் போன்றவற்றையும் உடனடியாக கைவிடுமாறு கேட்டுள்ளார், என தெரிவித்துள்ளார்.
இதேவேளை கடந்த அரசாங்கத்தின் தாக்குதலுக்கு பயந்து நாட்டை விட்டு தப்பியோடிய ஊடகவியலாளர்கள் மற்றும் மாற்றுக்கருத்துடையோரை நாடு திரும்புமாறும் அவர் அழைத்துள்ளார்.
நேற்றிலிருந்து நீங்கள் எங்களை விமர்சிக்கலாம்;,ஊடக சுதந்திரத்திற்கு அச்சுறுத்தல் விடுக்கும் எவருக்கும் எதிராக கடும் நடவடிக்கை எடுப்போம் என அவர் குறிப்பிட்டுள்ளதுடன் கடந்த காலங்களில் ஊடகவியலாளர்கள் படுகொலைசெய்யப்பட்டது, தாக்கப்பட்டது குறித்து விசாரணகைள் இடம்பெறும் என்றும் குறிப்பிட்டுள்ளார்.