செய்திகள்

எங்கள் அரசாங்கம் அமையட்டும் நாங்களும் திருடர்களை பிடிப்போம்: ஐ.ம.சு.கூ செயலாளர் தெரிவிப்பு

பொதுத் தேர்தல் முடியட்டும் நாங்களும் திருடர்களை பிடிப்போம் என ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பு  பொதுச் செயலாளர் பாராளுமன்ற உறுப்பினர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார். நேற்று கொழும்பில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பொன்றிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
மத்திய வங்கி ஆளுனர் விவகாரம் தொடர்பாக பாராளமன்றத்தில் விவாதத்தை நாம் கோரியிருந்த நிலையில் அதற்கு அரசாங்கம் இணக்கம் தெரிவிக்கவில்லை. அரசாங்கமே பெரிய திருடர்களை பாதுகாக்கின்றது. நல்லாட்சியெனக் கூறிக்கொண்டு எதிரணியினரை கைது செய்கின்றது. நாமும் அப்படி பிடிப்போம். பொதுத் தேர்தலின் பின்னர் அதனை செய்வோம்.. என தெரிவித்துள்ளார்.