செய்திகள்

எங்க வீட்டு பிள்ளை 50 வது ஆண்டு விழாவில் சரோஜா தேவி

 

எம்.ஜி.ஆர். இரு வேடங்களில் நடித்து வெற்றிகரமாக ஓடிய படம் ‘எங்க வீட்டு பிள்ளை’. இதில் நாயகியாக சரோஜா தேவி நடித்து இருந்தார். நம்பியார், நாகேஷ் போன்றோரும் நடித்து இருந்தனர். சாணக்யா இயக்கினார்.

இப்படத்தில் இடம் பெற்ற ‘‘நான் ஆணையிட்டால், அது நடந்து விட்டால், ‘கண்களும் காவடி’, ‘குமரி பெண்ணின் உள்ளத்திலே’ ‘மலருக்கு தென்றல்’, ‘நான் மாந்தோப்பில் நின்றிருந்தேன்’, ‘பெண் போனால்’ போன்ற பாடல்கள் பட்டி தொட்டியெங்கும் கலக்கியது. 1965–ல் இப்படம் வெளியானது.

தற்போது இப்படம் வெளியாகி 50 ஆண்டுகள் ஆனதை விழாவாக இன்று ரசிகர்கள் கொண்டாடினர். இந்த விழா தியாகராய நகரில் உள்ள சர்.டி.பி. தியாகராயர் ஹாலில் நடந்தது.  இந்த விழாவில் சரோஜாதேவி கலந்துகொண்டார்.

Sarojadevi (2)