செய்திகள்

எட்டியாந்தோட்டையில் இடம்பெற்ற வாகன விபத்தில் இருவர் பலி

கொழும்பு , ஹட்டன் பிரதான வீதியில் எட்டியாந்தோட்டை கபுலுமுல்லை பகுதியில் இன்று காலை  இடம்பெற்ற வாகன விபத்தில் இருவர் உயிரிழந்துள்ளனர்.
வீதியில் பயணித்த மோட்டார் சைக்கிளோன்று பஸ்ஸொன்றுடன் மோதியதையடுத்தே இந்த விபத்து சம்பவம் இடம்பெற்றுள்ளது.
இந்த சம்பவத்தில் மோட்டார் சைக்கிளில் பயணித்த இளைஞனொருவனும் யுவதியொருவருமே உயிரிழந்துள்ளனர். உயிரிழந்தவர்களின் சடலம் கரவனெல்லை வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.