செய்திகள்

எதியோப்பியாவில் தூதரகமொன்றை அமைக்க அரசாங்கம் நடவடிக்கை

எதியோப்பியா அடிஸ் அபாபாவில் இலங்கையின் வதிவிட இராஜதந்திர தூதரகமொன்றை நிறுவுவதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளது.
இது தொடர்பாக வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீரவினால் சமர்பிக்கப்பட்ட யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
ஆபிரிக்கப் பிராந்தியத்தில் 62 நாடுகள் உள்ளன. இவற்றில் 54 நாடுகள் மாத்திரமே இறைமையுள்ள நாடுகளாகும். இவற்றுள் 15 ஆபிரிக்க நாடுகளுடன் இராஜ தந்திர தொடர்புகளை நிலைநாட்டுவதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
அதிலும் தூதுவக் குழுக்கள் செயற்படுவது 04 ஆபிரிக்க நாடுகளில் மாத்திரமே. கிழக்கு ஆபிரிக்காவிலும் மத்திய ஆபிரிக்காவிலும் ஆகப்பெரிய பொருளாதார வளத்தைக் கொண்டுள்ள நாடாக எதியோப்பியா காணப்படுகின்றது.
எதியோப்பியாவில் வியாபார மற்றும் பொருளாதார துறைகளில் இலங்கைக்கு பெருமளவு வாய்ப்பு உள்ளது. ஆபிரிக்காவுடன் தொடர்புகளை மேலும் அதிகரிப்பதற்காக உத்தியோகபூர்வ தலைநகரமாகிய அடிஸ் அபாபாவில் வதிவுத் தூதரகமொன்றை நிறுவ வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சர்  மங்கள சமரவீர அவர்களினால் முன்வைக்கப்பட்ட யோசனைகளுக்கு அமைச்சரவையின் அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது.
n10