செய்திகள்

எதிரிகள் நம்மை கவனிக்கின்றனர்: மனோகர் பாரிக்கர்…

எதிரிகள் நம்மை கவனித்துக் கொண்டிருக்கிறார்கள் எனத் தெரிவித்துள்ள மத்திய அமைச்சர் மனோகர் பாரிக்கர், ஆயுதங்களை உள்நாட்டில் தயாரிப்பதே அரசின் இலக்கு எனவும் தெரிவித்துள்ளார்.

ரூர்க்கி ஐ.ஐ.டி.,யில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட மத்திய பாதுகாப்பு துறை அமைச்சர் மனோகர் பாரிக்கர் பேசியதாவது: மேக் இன் இந்தியா’ திட்டத்தின் கீழ் ராணுவ தளவாடங்களையும், ஆயுதங்களையும் உள்நாட்டிலேயே தயாரிப்பது தான் அரசின் முக்கிய இலக்கு. அதே நேரத்தில், நம் படைகள் எப்போதும் தயார் நிலையில் இருக்க வேண்டியது அதைவிட முக்கியமாகும். எதிரிகள் நம்மை தொடரந்து கவனித்து வருகின்றனர் என்பதை உணர வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

மேலும் அவர் கூறுகையில், ஐ.ஐ.டி.,யில் பி.டெக்., பட்டம் பெற்றுள்ள முன்னாள் மாணவரான நான், பிற மாணவர்களை போல் அமெரிக்கா, பிரிட்டன் போன்ற நாடுகளுக்கு வேலைக்கு செல்லாமல் இந்தியாவிலேயே இருந்து விட்டேன். மக்களோடு மக்களாக வாழ்ந்த என்னை, அரசியல் எனும் நதியில் பின்னாலிருந்து சிலர் தள்ளி விட்டனர். ஆனால் அந்த நதியில் நீந்துவதற்கு நான் நன்கு பழகி விட்டேன். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

 

N5