செய்திகள்

எதிர்க்கட்சிகளின் நம்பிக்கையில்லாப் பிரேரணை சிறுபிள்ளைத்தனமானது: ஜோன் அமரதுங்க

தன்மீது எதிர்க்கட்சியினர் கொண்டுவந்துள்ள நம்பிக்கையில்லா பிரேரணை சிறுபிள்ளைத் தனமானது என்று அமைச்சர் ஜோன் அமரதுங்க விமர்சித்திருக்கின்றார்.

“இந்த நம்பிக்கையில்லா பிரேரணையை நான் வாசித்துப் பார்த்தேன். அதில் எனக்கு எதிராக விரல் நீட்டுவதற்குரிய குற்றச்சாட்டுக்கள் எதுவும் இல்லை. அதில் குறிப்பிடப்பட்டுள்ள சம்பவம் நடந்தபோது நான் அங்கிருக்கவில்லை. அதில் நான் தொடர்புபட்டிருக்கவும் இல்லை”  எனவும் தெரிவித்தார் அவர்.

“இதனைவிட பாரதூரமான சம்பவங்கள் இந்த நாட்டில் நடந்திருக்கின்றன. அதுபற்றி பேசாமல் இரண்டு தரப்புக்கு இடையில் நடந்த மோதலில் சிறுகாயம் ஏற்பட்ட சம்பவத்திற்காக நம்பிக்கையில்லா பிரேரணை கொண்டுவந்திருக்கிறார்கள்” என்றும் கூறினார் அமைச்சர்.

எதிர்க்கட்சி ஆதரவாளர்கள் மீது தாக்குதல் நடத்தியவர்கள் மீது பொலிஸார் சட்டப்படி நடவடிக்கை எடுத்துவருவதாகவும் ஜோன் அமரதுங்க தெரிவித்தார்.