செய்திகள்

எதிர்க்கட்சித் தலைர் யார்? 7 ஆம் திகதி சபாநாயகர் அறிவிப்பார்!

இலங்கைப் பாராளுமன்றத்தின் எதிர்க்கட்சித் தலைவர் யார் என்பதை சபாநாயகர் சமல் ராஜபக்‌ஷ எதிர்வரும் 7 ஆம் திகதி பாராளுமன்றத்தில் அறிவிப்பார்.

ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சியையும் இணைத்துக்கொண்டு தேசிய அரசாங்கம் அமைக்கப்பட்டதையடுத்து எதிர்க்கட்சித் தலைவர் யார் என்ற சர்ச்சை அரசியல் வட்டாரங்களில் உருவாகியுள்ள நிலையிலேயே சபாநாயகரின் இந்த அறிவிப்பு வெளியிடப்படவுள்ளது.

பாராளுமன்றத்திலும் இந்தப் பிரச்சினை கடந்த வாரம் எழுப்பப்பட்டது. அரசாங்கத்தில் ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சி இணைந்துகொண்டிருப்பதால் நிமல் சிறிபால டி சில்வா தொடர்ந்தும் எதிர்க்கட்சித் தலைவராக பதவிவகிக்க முடியாது என சர்ச்சை கிளப்பப்பட்டது.

இந்த நிலையிலேயே இது தொடர்பான முடிவை அறிவிக்கும் பொறுப்பு சபாநாயகரிடம் ஒப்படைக்கப்பட்டிருக்கின்றது.