எதிர்க்கட்சித் தலைவராக சம்பந்தன்? அரசியல் மாற்றத்தையடுத்து எழும் கேள்வி
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையிலான அரசாங்கத்தில் இணைந்து கொண்டுள்ள நிலையில் தற்போது நிமல் சிறிபால டி.சில்வாவினால் எதிர்க்கட்சித் தலைவர் பதவியை வகிக்க முடியுமா என்ற கேள்வி எழுந்துள்ளது.
அவ்வாறு அவர் பதவியில் தொடர முடியாத நிலை ஏற்பட்டால் பாராளுமன்றத்தில் மூன்றாவது பலம் பொருந்திய கட்சியாகவுள்ள தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் எதிர்க்கட்சித் தலைவராகப் பதவியேற்க வேண்டியிருக்கும் எனத் தெரிவிக்கப்படுகின்றது.
சிறிலங்கா சுதந்திரக் கட்சி தற்போது ஐக்கிய தேசிய கட்சியுடன் இணைந்து தேசிய அரசாங்கம் அமைந்துள்ள நிலையில் சுதந்திரக் கட்சி ஆளும் கட்சியாக மாறிவிட்டது. இந்த நிலையில் தற்போது எதிர்க்கட்சித் தலைவராக பதவி வகிக்கும் நிமால் சிறிபால டி. சில்வா ஆளும் கட்சியில் இருந்துகொண்டு எதிர்க்கட்சித் தலைவர் பதவியை வகிக்க முடியுமா என்ற கேள்வியே எழுகின்றது.
இந்நிலையில் அவ்வாறு நிமால் சிறிபால டி. சில்வா எதிர்க்கட்சி தலைவர் பதவியை இழந்தால் அடுத்து யார் எதிர்க்கட்சித தலைவராக வருவார் என்று கேள்வியும் எழுகின்றது. தற்போதைய நிலைமையில் மூன்றாவது பெரிய கட்சியாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு காணப்படுகின்ற நிலைமையில் கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்மந்தன் எதிர்க்கட்சித்ங தலைவராக வருவாரா என்றும் அரசியல் ஆய்வாளர்கள் கேள்வி எழுப்புகின்றனர்.