செய்திகள்

எதிர்க்கட்சித் தலைவர் பதவியில் மாற்றம் அவசியமில்லை: அநுரா பிரியதர்சன யாப்பா

எதிர்க்கட்சித் தலைவர் பதவியில் மாற்றம் அவசியம் இல்லையென ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சி சுட்டிக்காட்டியுள்ளது. தற்போதைய எதிர்க்கட்சித் தலைவர் நிமல் சிறிபால டி சில்வாவே தொடர்ந்தும் அந்தப் பதவியிலிருக்க முடியும் எனவும் அக்கட்சி சுட்டிக்காட்டியிருக்கின்றது.

எதிர்க்கட்சித் தலைவர் தொடர்பான நிலைப்பாடு குறித்து இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கட்சியின் பொதுச்செயலாளர் அநுர பிரியதர்ஷன யாப்பா தெளிவுபடுத்தினார். ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு தொடர்பாகவும் இதன் போது ஊடகவியலாளர்கள் கேள்வியெழுப்பினார்கள்.

இதற்குப் பதிலளித்த சுசில் பிரேமஜயந்த, அடுத்த பாராளுமன்றத் தேர்தலில் பெரும்பான்மையைக் கைப்பற்றுவதே இலக்காகும் என குறிப்பிட்டார். எதிர்க்கட்சித் தலைவராக நிமல் சிறிபால டி சில்வா இருக்கலாம். அதில் மாற்றம் அவசியமில்லை எனவும் அவர் தெரிவித்தார்.