செய்திகள்

எதிர்க்கட்சி எம்.பிக்கள் குழு ஜெனிவா செல்ல தீர்மானம்

ஜெனிவாவில் அமைந்துள்ள சர்வதேச பாராளுமன்ற சங்கத்தினரை சந்திப்பதற்கு எதிர்க்கட்சி பாராளுமன்ற உறுப்பினர்கள் குழுவொன்று தீர்மானித்துள்ளது.
எதிர்க்கட்சி பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு மேற்கொள்ளப்படும் இடையூறுகள் தொடர்பாக முறையிடும் வகையிலேயே அவர்களை சந்திக்க தீர்மானித்துள்ளதாகவும் இதன்படி எதிர்வரும் இரண்டு வாரங்களுக்குள் அவர்களை சந்திக்கவுள்ளதாகவும் முன்னாள் அமைச்சர் பந்துலகுணவர்தன தெரிவித்துள்ளார்.
நேற்று கொழும்பில் நடைபெற்ற செய்தியாளர் ச்திப்பொன்றிலேயே அவர் இதனை தெரிவித்துள்ளார்