செய்திகள்

எதிர்க் கட்சி தலைவர் தொடர்பான தீர்மான அறிவிப்பு ஒத்திவைக்கப்பட்டது

பாராளுமன்றத்தில் எதிர்க் கட்சி தலைவர் பதவி தொடர்பாக ஆராய்ந்து வருவதாகவும் தீர்மானத்தை பின்னர் அறிவிப்பதாகவும் சபாநாயகர் சமல் ராஜபக்ஷ இன்று பாராளுமன்றத்தில் அறிவித்துள்ளார்.

இது புதிய விடயம் என்பதால் நன்றாக ஆராய்ந்தே முடிவெடுக்க வேண்டுமெனவும் இதற்கு காலம் தேவை இதனால் பின்னர் இது தொடர்பில் அறிவிக்கின்றேன் என சபாநாயகர் தெரிவித்துள்ளார்.

இதேவேளை எதிர்க் கட்சி தலைவராக தினேஸ் குணவர்தனவை நியமிக்கமாறு கோரி ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்மைப்பின் 50 பாராளுமன்ற உறுப்பினர்களின் கையொப்பங்கள் அடங்கிய கடிதமொன்றும் இன்று சபாநாயகரிடம் கையளிக்கப்பட்டுள்ளது.