செய்திகள்

எதிர்க் கட்சி தலைவர் தொடர்பில் பேரினவாதிகளின் கருத்து சர்வாதிகார போக்குடையது: செல்வம் எம்.பி

எதிர்க்கட்சி தலைவர் பதவி தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தனுக்கு கிடைக்கவேண்டும் என்கின்ற கருத்துக்கு முரண்பாடாக போரினவாதிகள் வெளியிட்டு வரும் கருத்து சர்வாதிகாரபோக்கை வெளிக்காட்டுவதாக உள்ளது என வன்னி பாராளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்தார்.

இது தொடர்பில் அவர் இன்று  வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

இலங்கையில் இரண்டாவது தடவையாகவும் எதிர்க்கட்சி தலைவராக தமிழர் ஒருவர் வருவதற்கு காலம் கனிந்துள்ள நிலையில் அதனை தடுக்க பேரினவாதிகள் பெரும் பிரயத்தனங்களை எடுத்து வருகின்றனர்.

ஜனநாயகத்தை விரும்பிய தமிழர்கள் கால ஓட்டத்தில் போரினவாதிகளின் பல்வேறு அடக்குமுறைகளினால் ஆயத போராட்டத்திற்கு தள்ளப்பட்டு மீண்டும் அகிம்சை வழிக்கு தம்ழம ஈடுபடுத்தும் நிலை ஏற்றபட்டுள்ளபோது போரினவாதிகள் மீண்டும் தமது கட்டுக்கடங்காத செயற்பாட்டை முன்னெடுக்க தொடங்கியுள்ளனர்.

ஆளுமையும் திறமையும் அரசியல் அனுபவமும் கொண்ட தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவருக்கு எதிர்க்கட்சி தலைவர் பதவியை வழங்குவதற்கு பெரும்பான்மை பேரினவாதிகள் தடையாக இருப்பது தமிழர்களுக்கு விமோசனம் இல்லை என்பதனையும் எத்தீர்வும் தமிழர்களுக்கு கிடைக்காது என்பதனையுமே மறைமுகமாக காட்டி நிற்கின்றது.

இவ்வாறன நிலை தமிழர்கள் மத்தியில் மீண்டும் நம்பிக்கை அற்றதன்மையை உருவாக்க கூடிய ஒரு நிலைமைக்கு வழிசமைக்கும். என்று அவரது அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.