செய்திகள்

எதிர்பார்ப்புக்களுடன் கூடுகிறது சுதந்திரக்கட்சியின் செயற்குழு

பல குழப்பங்களுக்கு மத்தியில் ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் மத்திய செயற்குழு இன்று  கூடுகிறது. தலைவர் மைத்திரிபால சிறிசேன தலைமையில் செயற்குழு பத்தரமுல்ல அபேகம வளாகத்தில் கூடுகிறது. இன்று மாலை கூட்டம் நடக்குமென தெரிவிக்கப்படுகிறது.

இக்கூட்டத்துக்கு முன்னாள்  ஜனாதிபதிகளான சந்திரிகாமற்றும் மஹிந்த கலந்துகொள்வது  தொடர்பில்  எதுவும் தெரியவில்லை என கட்சியின் உறுப்பினர் ஒருவர்  தெரிவித்தார்.