செய்திகள்

எதிர்வரும் செவ்வாய்க்கிழமை தொடக்கம் தபால் விநியோகம் ஆரம்பம்

எதிர்வரும் செவ்வாய்க்கிழமை தொடக்கம் கடிதங்கள் மற்றும் பொதிகளை விநியோகிக்கும் செயற்பாடுகள் ஆரம்பிக்கப்படவுள்ளதாக தபால் மா அதிபர் ரஞ்சித் ஆரியரத்ன தெரிவித்துள்ளார்.3 இலட்சத்திற்கும் அதிகமான கடிதங்கள் தபால் திணைக்களத்தில் குவிந்து கிடப்பதாகவும் தபால் திணைக்களத்தில் குவிந்துள்ள கடிதங்களை வகை பிரிக்கும் நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும் மேலும் தெரிவித்துள்ளார்.

குறைந்தபட்ச ஊழியர்களை பயன்படுத்தி, கடிதங்களை வகைபிரிக்கும் நடவடிக்கை முன்னெடுக்கப்படுவதாகவும் மத்திய மற்றும் பிராந்திய தபால் பரிமாற்றகத்தில் இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்படுவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.(15)