செய்திகள்

எதிர்வரும் வாரங்கள் தீர்மானமிக்கது! சுகாதார ஆலோசனைகளை பின்பற்றுங்கள் : மக்களுக்கு கோரிக்கை

கொவிட் 19 எனப்படும் கொரோனா வைரஸ் பரவும் வேகத்தை ஆராயும் போது எதிர்வரும் இரண்டு வாரங்களும் இலங்கைக்கு தீர்மானம் மிக்கதாக இருக்குமென தொற்று நோய் ஆய்வு பிரிவு விசேட வைத்திய நிபுணர் ஆனந்த விஜேவிக்கிரம தெரிவித்துள்ளார்.
இதனால் இந்த காலப்பகுதியில் நோயாளர் எண்ணிக்கையில் குறிப்பிட்ட அளவு அதிகரிப்பு ஏற்படக் கூடும் என்பதனால் மக்கள் இது குறித்து அவதானமாக இருக்க வேண்டுமென அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.
இந்த காலப்பகுதியில் சுகாதார துறையினரின் ஆலோசனைகளை பின்பற்றி சமூக இடைவெளியை பேணுமாறும் மற்றும் தேவையான சுகாதார பாதுகாப்பு நடவடிக்கைகளை முன்னெடுக்குமாறும் அவர் பொது மக்களை கேட்டுக்கொண்டுள்ளார்.
இவ்வாறாக மக்கள் ஆலோசனைகளை பின்பற்றுவதன் மூலம் மாத்திரமே வைரஸை கட்டுப்படுத்த முடியுமென அவர் தெரிவித்துள்ளார். -(3)