எதிர்வரும் வெள்ளிக்கிழமை கிளிநொச்சியில் அடையாள உண்ணாவிரதம்
இராணுவத்தாலும் ஒட்டுக்குழுக்களாலும் மற்றும் முள்ளிவாய்க்கால் பெரும் போரின் போதும் அதன் பின்னும் காணாமல் போகச் செய்யப்பட்ட உறவுகளை மீட்டுத் தரக்கோரி தொடர்ந்து இலங்கையின் எல்லா அசராங்கங்களையும் வேண்டியும் இதுவரையில் எந்த தீர்வும் எட்டப்படாத நிலையில் காணாமல் போகச் செய்யப்பட்டவர்களின் உறவுகளுக்கு சிறையில் வாடும் அரசியல் கைதிகளின் உறவுகளுக்கும் எதிர்வரும் வெள்ளிக்கிழமை காலை 9 மணியிலிருந்து கிளிநொச்சி கந்தசாமி கோவில் வாளாகத்தில் அடையாள உண்ணாவிரதம் மேற்கொள்ள தீர்மானித்துள்ளனர்.
இந்த உண்ணாவிரத போராட்டத்திற்கு வடக்கு, கிழக்கிலுள்ள சிவில் அமைப்புகளின் பிரதிநிதிகள், மனித உரிமை அமைப்புகள், மதகுருமார்கள், புத்திஜீவிகள் கல்வி சமூகத்தை சேர்ந்தவர்கள், அரசியல் கட்சிகளை சேர்ந்தவர்கள், ஊடகவிலாயர்கள், காணாமல் போகச்செய்யப்பட்ட உறவுகளின் உறவுகள், சிறையில் வாடும் அரசியல் கைதிகளின் உறவுகள் அனைவரையும் காலந்து கொள்ளுமாறு கிளிநொச்சி மாவட்ட காணாமல்போகச் செய்யப்பட்ட உறவுகளின் உறவுகள், சிறைக்கைதிகளின் உறவுகள் ஆகியோரின் அமைப்பு அழைப்பு விடுத்துள்ளது.