செய்திகள்

எந்தவொரு அமைச்சு பொறுப்பையும் கூட்டமைப்பு எடுக்காது

புதிய அரசாங்கத்தின் அமைச்சரவையில் தமிழ் தேசிய கூட்டமைப்பு பங்கெடுக்காது என்று அதன் முக்கியஸ்தர் ஒருவர் சமகளம் செய்திச் சேவைக்கு திட்டவட்டமாக தெரிவித்தார்.

புதிதாக நியமனம் பெறும் அமைச்சர்கள் என்று ஊகம் தெரிவித்து வெளியிடப்பட்டுள்ள பட்டியலில் எம் . ஏ . சுமந்திரன் மொழி, சமூக ஒருமைப்பாடு, மீளமர்வு மற்றும் சமாதான அமைச்சராக நியமிக்கப்படுவார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளதே என்று கேட்டபோதே  அந்த முக்கியஸ்தர் இவ்வாறு கூறினார்.

அனால், அதேவேளை, நாளை மறுதினம் அமைக்கப்படவிருக்கும் தேசிய ஆலோசனை சபையில் கூட்டமைப்பு பங்கேற்கும் என்றும் இதில் எவர் கூட்டமைப்பை பிரதிநிதித்துவப்படுத்துவார் என்பது பின்னர் அறிவிக்கபப்டும் என்றும் அவர் தெரிவித்தார்.