செய்திகள்

எந்திரன் பாகம் – 2 விரைவில்

எந்திரன் படத்தின் இரண்டாம் பாகத்தை எடுக்கும் முயற்சியில் முழுவீச்சில் இறங்கியுள்ளார் இயக்குநர் ஷங்கர்.
2010ம் ஆண்டில் ரஜினிகாந்த், ஐஸ்வர்யாராய் நடிப்பில் வெளிவந்து மாபெரும் வெற்றி பெற்ற திரைப்படம் எந்திரன். தற்போது அதன் இரண்டாம் பாகத்தை எடுக்கும் முயற்சியில் இறங்கியுள்ள இயக்குநர் ஷங்கர் படத்திற்கான கதை முழுவதையும் முடித்து விட்டு படப்பிடிப்பு இடங்களைத் தேர்வு செய்து கொண்டு இருக்கிறார்.

இதற்கான முயற்சியில் மொத்த படக்குழுவும் இறங்கி வேலை பார்க்கின்றனர், எந்திரன் படம் 132 கோடி ரூபாய் பொருட்செலவில் உருவாகி இருந்தது குறிப்பிடத்தக்கது. எந்திரன் முதல் பாகத்தின் படக்குழுவினர் மீண்டும் இணைகின்றனரா அல்லது புதியவர்களுடன் ஷங்கர் கைகோர்க்கிறாரா என்பது தெரியவில்லை.