செய்திகள்

எந்த இனத்துக்கும் பாதிப்பின்றி தேர்தல் திருத்தம் அமைய வேண்டும் : ஜே.வி.பி கோரிக்கை

நியாயமான வகையில் நாட்டில் சகல இன மக்களினதும் பிரதிநிதித்துவம் உறுதிப்படுத்தப்படும் வகையில் தேர்தல் முறை மாற்றப்பட வேண்டுமென ஜே.வி.பி தெரிவித்துள்ளது. இது தொர்பாக அந்த கட்சியினால் அறிக்கையொன் வெளியிடப்பட்டுள்ளது.

புதிய தேர்தல் திருத்தத்தில் அவசரமாக எந்த திருத்தமும் மேற்கொள்ளப்படக் கூடாது. நீண்ட ஆராய்வின் பின்னர் மக்கள் கருத்துக்களை பெற்று அதன் பின்னரே அதனை செய்ய வேண்டும்.  இந்த திருத்தத்தினூடாக எந்தவொரு இனத்துக்கும் பாதிப்பு ஏற்படாத வகையில் சகல இனங்களின் பிரதிநிதித்துவமும் உறுதிப்படுத்தப்படும் வகையில் அது அமைய வேண்டும். என அந்த அறிக்கையில் தெரிவிக்ப்பட்டுள்ளது.