செய்திகள்

எந்த நிலையிலும் மின் கட்டணம் அதிகரிக்கப்படாது : மின்சார பிரதி அமைச்சர்

எந்த நிலையிலும் மின் கட்டணம் அதிகரிக்கப்படாது எனவும் மின்சார சபை ஒருபோதும் தனியார் மயப்படுத்தப்படாது எனவும் மின்சார பிரதி அமைச்சர் அஜித் பீ பெரேரா தெரிவித்துள்ளார்.
அரசாங்க தகவல் திணைக்களத்தில் நேற்று நடைபெற்ற அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் செய்தியாளர் சந்திப்பொன்றிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
எந்த நெருக்கடி நிலையிலும் பாவனையாளர்களுக்கு பாதிப்பு வராது என்றும் மின் கட்டணம் ஒருபோதும் அதிகரிக்கப்படமாட்டாது என்றும் தெரிவித்த அவர், இலங்கை மின்சார சபை முகாமைத்துவத்தில் செயற்திறன் மிக்க மாற்றமொன்று தேவை என்கின்ற போதிலும் அது ஒருபோதம் தனியார் மயப்படுத்தப்பட மாட்டாது. அத்துடன், கொள்கை ரீதியில் மின்வெட்டுக்களை மேற்கொள்வதென்றால் அதை கூறுவதில் அரசாங்கத்திற்கு வெட்கப்படுவதற்கு ஒன்றும் கிடையாது என அவர் தெரிவித்துள்ளார்.
n10