செய்திகள்

எந்த முறையிலான தேர்தலுக்கும் ஐ.தே.க தயார் :கிரியெல்ல

எந்த முறையில் தேர்தல் நடந்தாலும் அதற்கு ஐக்கிய தேசிய கட்சி தயாராகவே  இருப்பதாக அமைச்சர் லகஷ்மன் கிரியெல்ல தெரிவித்துள்ளார்.
எதிர்வரும் பொதுத் தேர்தலை பழைய முறையில் நடத்தினாலும் சரி புதிய முறையில் நடத்தினாலும் சரி  நாம் அதற்குதயாராகவே இருக்கின்றோம். எப்படியும் எமது வெற்றி உறுதியானதே. ஶ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி அடங்கலாக ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி 50 ஆசங்களை பெறுவதே சந்தேகமானது.  என அவர் தெரிவித்துள்ளார்.
நேற்று கண்டியில் நடைபெற்ற நிகழ்வொன்றிலேயே அவர் இதனை தெரிவித்துள்ளார்.